தர்மபுரியில் அனைத்து தொழிற் சங்கம் சார்பில் பாரத் பந்த்: சாலை மறியல்

பெட்ரோல், டீசல், கேஸ் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என முழக்கமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2021-09-27 17:30 GMT

தர்மபுரியில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழில்சங்கம்  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்

திமுக கூட்டணி கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்

தர்மபுரியில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து  நாடு தழுவிய அளவில் நடைபெறும் ஆர்பாட்டத்தின் ஒரு பகுதியாக தருமபுரி தலைமை தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது.

மறியல் போராட்டத்திற்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகராஜன் தலைமை வகித்தார். இந்த மறியல் போராட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும்.தொழிலாளர் நல நான்கு சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விடுவதை நிறுத்த வேண்டும்.

படித்த இளைஞர்களுக்கு தகுதிகேற்ற வேலையை உருவாக்க வேண்டும்.100 நாள் வேலையை 200 நாளாக உயர்த்த வேண்டும். பெட்ரோல், டீசல், கேஸ் ஆகியவற்றின் விலைகளை ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டு வர வேண்டும் என முழக்கமிட்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி மறியல் செய்த 100--க்கும் மேற்பட்டவரை கைது செய்தனர்.இதே போன்றுமத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்க மறியல் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து திமுக விவசாய சங்கம் சார்பில் தொலைபேசி நிலையம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் 172 பேரை போலீசார் கைது செய்தனர்.



Tags:    

Similar News