தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2021-10-21 05:00 GMT

தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்ட ஏஐடியூசி ஆட்டோ தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் பெரிய முனுசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கந்தசாமி, பொருளாளர் சக்திவேல், ஏ.ஐ.டி.யு.சி.மாவட்ட தலைவர் மாதேஸ்வரன், மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துணைத்தலைவர் சுதர்சனன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரதாபன் உள்ளிட்ட நிர்வாகிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.

கொரோனா தொற்று காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து பாதிக்கப்பட்ட ஆட்டோ தொழிலாளர்களுக்கு, மாதம் ரூ. 7500 நிவாரணமாக வழங்க வேண்டும். பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளதால், மீட்டர் கட்டணத்தில் திருத்தம் செய்து உயர்த்த வேண்டும். வீடில்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு வழங்க வேண்டும்.

புதிய மோட்டார் வாகன சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆட்டோ தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் கடன் வழங்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News