இலளிகம் அரசு பள்ளியில் அடல் டிங்கரிங் ஆய்வகம் திறப்பு

முப்பரிமாண அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்பட கருவி இணைத்த ட்ரோன் ஆகியவை காட்சி படுத்தப்பட்டது.

Update: 2021-09-23 01:30 GMT

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இளலிகம் அரசு மேல்நிலைப்பள்ளியில் அடல் டிங்கரிங் லேப் திறப்பு விழாவிற்கு தர்மபுரி மாவட்ட கல்வி அலுவலர் பாலசுப்ரமணியம்  தலைமை வகித்தார். தர்மபுரி மாவட்ட மருத்துவக்கல்லூரியின் முதல்வர் அமுதவள்ளி  லேபை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். தலைமையாசிரியர் சீனிவாசன்  ஆய்வகத்தின் செயல்பாடுகள்பற்றி விரிவானமுறையில் எடுத்துரைத்தார். மாணவர்கள் விழாவில் தங்களின் அறிவியல் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக நடமாடும் ரோபோ சிறப்பு விருந்தினரை வரவேற்று பூங்கொத்து வழங்கியது அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் முப்பரிமாண அச்சுப்பொறி, தானியங்கி சிக்னல் மற்றும் 250 கிராம் எடையுள்ள புகைப்பட கருவி ( Camera) இணைத்த ட்ரோன் 20 அடி உயரம் பறந்தது. இந்த ட்ரோன் எடுக்கும் புகைப்படங்களை நேரடியாக அலைபேசியில் பார்த்த சிறப்பு விருந்தினர் இதை தயாரித்து இயக்கிசெயலாக்கம் செய்த மாணவர்களை பாராட்டினர்.

பள்ளியின் முதுகலை ஆசிரியர் கிருஷ்ணன்  நன்றியுரை ஆற்றினார். இலளிகம் பஞ்சாயத்து தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் உறுப்பினர்கள், உள்ளுர் முக்கிய பிரமுகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் விழாவில் கலந்து கொண்டனர். அனைத்து ஆசிரியர்களும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்

Tags:    

Similar News