அரசு குழந்தைகள் இல்லத்தில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்பு: கலெக்டர் தகவல்

தர்மபுரியில் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு.

Update: 2021-12-14 05:00 GMT

மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி.

தர்மபுரி மாவட்டத்தில் சமூகப் பாதுகாப்புத்துறையின்கீழ் அரசினர் குழந்தைகள் இல்லம், ஆர்.கோபிநாதம்பட்டியில் தங்கி கல்வி பயில நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துநர் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்ற நபர்கள் அவர்களது விண்ணப்பங்களை உரிய கல்வி சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் தேர்வுக்குழு மூலம் நேர்முக தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

ஆர்.கோபிநாதம்பட்டி, அரசு குழந்தைகள் இல்லத்திற்கு 3 பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு செய்யப்படும் ஆற்றுப்படுத்துநருக்கு வருகையின் அடிப்படையில் ஒரு வருடத்திற்கு 60 நாட்கள் மிகாமல் மதிப்பூதியம் அடிப்படையில் ஒரு வருகைக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூ.1000/- மட்டும் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை தர்மபுரி மாவட்ட dharmapuri.nic.in இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் இல்லம், ஆர்.கோபிநாதம்பட்டி என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.12.2021 மாலை 5.00 மணிக்குள் வந்து சேருமாறு அனுப்பி வைத்திட தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News