தருமபுரி போக்குவரத்து மண்டலத்தில் 95 சதவீத பஸ்கள் இயக்கம்

தொழிற்சங்கள் பொது வேலை நிறுத்த போராட்டம் - தருமபுரி போக்குவரத்து மண்டலத்தில் 95 % இயக்கம்.

Update: 2022-03-29 05:45 GMT

பைல் படம்.

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்தும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும். தொழிலாளர்கள் திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். புதிய பென்சன் திட்டம் ரத்து செய்ய வேண்டும். வருமானவரி செலுத்தாத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் அளிக்க வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை நகர்புறத்திற்கு நீட்டிக்க வேண்டும். சம்யுக்த கிசான் மோர்ச்சா சங்க விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். பணக்காரர்கள் மீது செல்வ வரி விதிக்க வேண்டும். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி ஆஷா ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசிற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மத்திய தொழிற்சங்கள் நேற்றும், இன்றும் பொது வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்று வருகிறது. 

நேற்று முதல் நாள் போராட்டத்தில், பேருந்துகள் இயக்கப்படவில்லை. இன்று இரண்டாவது முறையாக போராட்டத்தில், தருமபுரி போக்குவரத்து மண்டலத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 12 போக்குவரத்து பணிமனைகளில், நகர்புற மற்றும் புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் 840 பேருந்துகளில் 95% பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, பொம்மிடி, அரூர் உள்ளிட்ட  6 பணிமனைகளில் 95 சதவீதம் இயக்கப்பட்டுள்ளது. இதனால் தருமபுரி நகர மற்றும் அரசு புறநகர் பேருந்து நிலையத்தில், அலுவலகங்கள், தினசரி வேலைக்கு செல்வோர் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள்  சிரமமின்றி பேருந்துகளில் ஏறி பயணம் செய்கின்றனர். இன்றைய இரண்டாவது நாள் போராட்டத்தில், பேருந்துகள் முழுவதும் இயக்கப்படுவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

Tags:    

Similar News