மாவீரன் பகத்சிங் 91-வது நினைவு தினம் அனுசரிப்பு

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பகத்சிங்கின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

Update: 2022-03-23 08:45 GMT

பகத்சிங் நினைவு நாள் விழா.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தருமபுரி மாவட்டக்குழு சார்பில், மாவீரன் பகத்சிங்கின் 91-வது நினைவு தினம் தருமபுரி பெரியார் மன்றத்தில் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு பகத்சிங்கின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

மாநில துணைச் செயலாளர்கள் பழனிசாமி, வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், மாவட்டச் செயலாளர் தேவராசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் கோபால், தமிழ்க்குமரன், மாவட்ட பொருளாளர் மாதேஸ்வரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

Tags:    

Similar News