தீபாவளிக்கு 3 நாட்கள் இரவு 7 மணி வரை ரேஷன் கடைகள் செயல்படும்: கலெக்டர் தகவல்

தர்மபுரி மாவட்டத்தில் நவ.1,2,3 ஆகிய நாட்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும்.

Update: 2021-10-28 06:00 GMT

மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி

வருகின்ற நவம்பர் 4-ஆம் தேதி "தீபாவளிப் பண்டிகை" கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு பொது மக்களின் நலன் கருதி தர்மபுரி மாவட்டத்தில் 01.11.2021 திங்கட்கிழமை, 02.11.2021 செவ்வாய்கிழமை மற்றும் 03.11.2021 புதன்கிழமை ஆகிய நாட்களில் நியாயவிலைக் கடைகள் காலை 8.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை செயல்படும்.

தர்மபுரி மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரர்கள் மேற்குறிப்பிட்டுள்ள நாட்களில் தங்களது குடும்ப அட்டைகளுக்கு உரிய பொது விநியோகத் திட்ட அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த விநியோகம் தீபாவளிப் பண்டிகைக்கு முன்னதாக வாங்க விரும்புபவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.

தீபாவளிக்கு முன்னதாக அத்திவாசியப் பொருட்கள் பெறாதவர்கள் வழக்கம் போல் பண்டிகை காலம் முடிந்து, 08.11.2021 திங்கட்கிழமை முதல் பொருட்களை குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த நியாய விலைக்கடைகளில் தொடர்ந்து பெற்றுக் கொள்ளலாம்.

தர்மபுரி மாவட்டத்தில் தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News