தருமபுாியில் 2ம் நாள் புத்தக திருவிழா: ஆர்வத்துடன் புத்தக வாசிப்பாளா்கள்

தருமபுாி புத்தக திருவிழாவில் 2ம் நாளாக ஆா்வத்துடன் பொதுமக்கள் புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.

Update: 2021-12-24 16:30 GMT

 புத்தக கண்காட்சியை இன்று 2ம் நாளாக ஏராளமானோர் பார்வையிட்டு புத்தகங்களை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் தகடூர் புத்தக பேரவை சார்பில், புத்தக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் ஆண்டுதோறும் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தகத் திருவிழா மிகவும் எளிமையாக நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டிற்கான புத்தகத் திருவிழா நேற்று முதல் நான்கு நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தப் புத்தகத் திருவிழாவை தருமபுரி மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்ஷினி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து அரங்குகளில் வைத்துள்ள புத்தகங்களை பார்வையிட்டார்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக புத்தக கண்காட்சியை பார்வையிட புத்தக வாசிப்பாளர்கள் வருகை குறைவாக இருக்கும் என்பதால், இந்த ஆண்டு புத்தகத் திருவிழா எளிமையாகவே நடைபெற்று வருகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் விடுதலை போராட்ட வீரர்கள், பல்வேறு அரசியல் தலைவர்கள், வரலாற்று அறிஞர்கள், அறிவியல், வரலாற்று நூல்கள், சிறுகதைகள், நாவல், பொது அறிவு, போட்டித் தேர்வைக்கான புத்தகம், குழந்தைகளுக்கான அறிவுத்திறன் பயிற்சி நூல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் சுமார் 10 அரங்குகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நான்கு நாட்களில் தினம் ஒரு தலைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளனர். இந்த புத்தக கண்காட்சியை இன்று 2ம் நாளாக ஏராளமானோர் வந்து பார்வையிட்டு புத்தகங்களை ஆா்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

Tags:    

Similar News