தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் அதிமுக நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல்

தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் அதிமுக நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

Update: 2021-12-21 05:15 GMT

முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன்.

தர்மபுரி மாவட்டத்தில் 2 நாட்கள் அதிமுக நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நடைபெறுவதாக முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில், தர்மபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான உட்கட்சித் தேர்தல் நாளை (புதன்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது.

மாவட்டத்தில் கட்சியின் அடிப்படையில் உள்ள 20 ஒன்றியங்களில் 2708 கிளைகள், ஒரு நகராட்சியில் 33 வார்டுகள், 10 பேரூராட்சிகளில் 159 வார்டுகள் ஆகியவற்றிற்கு அவைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணைச் செயலாளர்கள் 2 பேர், பொருளாளர், மேலமைப்பு பிரதிநிதிகள் 3 பேர் ஆகிய பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த உட்கட்சித் தேர்தலுக்கு முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஏ.ஆர்.காளியப்பன் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த உட்கட்சித் தேர்தலில் அந்தந்த பகுதியை சேர்ந்த கட்சியின் எம்.எல்.ஏக்கள், கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கி தேர்தலை சிறப்பாக நடத்தி முடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்த உட்கட்சித் தேர்தலில் பங்கேற்கும் அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டுகிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News