செங்கல்பட்டு பகுதியில் விடிய விடிய பெய்த மழை, குளிர்ந்த சூழல் நிலவுகிறது

செங்கல்பட்டு மற்றும் புறநகர் பகுதியில் விடிய விடிய பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது

Update: 2021-07-15 01:45 GMT

செங்கல்பட்டில் விடிய, விடிய பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்கள் ,உள் மாவட்டங்கள் என பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழையானது பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று இரவில் இருந்தே செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய மிதமான முதல் கனமழை பெய்தது.

குறிப்பாக மதுராந்தகம், வண்டலூர், தாம்பரம், உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதன்படி, பல்லாவரம்,செங்கல்பட்டு, செய்யூர், மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மேலும் ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்நிலையில் மழை பெய்ததன் காரணமாக நகரின் சில பகுதிகளில் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. மேலும் நகரின் பல பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டு தற்போது குளிர்ந்த சூழ்நிலையே  நிலவி வருகிறது.

Tags:    

Similar News