‘‘நான் சாமியார் இல்லடா... சாமியே நான் தாண்டா’’

கீழ்பெண்ணாத்தூரில் அன்னபூரணி தனக்கு தானே கோயிலை கட்டி கும்பாபிஷேகம் செய்து கடவுளாக அவதரித்தார்;

Update: 2023-08-24 01:15 GMT

அன்னபூரணி அரசு அம்மனாக மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.(அன்னபூரணி சிலையாகவும், நிஜமாகவும்)

செங்கல்பட்டு மாவட்டத்தில் அன்னபூரணி அரசு அம்மன் தொண்டு நிறுவனம் நடத்தி வந்தவர் அன்னபூரணி. தன்னை அன்னபூரணி அரசு அம்மனாக மாற்றிக்கொண்டு ஆதிபராசக்தியின் அவதாரமாக கூறி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வருகிறார்.

கடந்த, 2014ல், தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்னபூரணி , தனது கணவர் மற்றும், 14 வயது பெண் குழந்தையை பிரிந்து, அவரது காதலனான அரசு என்பவருடன் ஈரோட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், அரசு என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், அன்னபூரணி தனது காதலனான, அரசு உருவ சிலையை வடிவமைத்து வழிபட்டு வந்தார். பின்பு ‘அன்னபூரணி அரசு அம்மன்’ என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்து, தன்னை ஆதிபராசக்தியின் மறு அவதாரம் என கூறி, பக்தர்களுக்கு அருளாசி வழங்கி வந்தார்.

இதற்கு இந்து அமைப்புகள் சார்பில் பலத்த எதிர்ப்பு எழுந்த நிலையில், இவை சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து யூ டியூப்பில் ஆன்மீக சொற்பொழிவை நடத்தி வந்தார்.

இந்நிலையில், ஆன்மீக பூமியான திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே ராஜா தோப்பு என்ற பகுதியில் ஒரு ஏக்கர் நிலம் வாங்கி அங்கு ஆஸ்ரமம் அமைக்க பூமி பூஜை போட்டார். அப்போது அங்கு வந்த சில பெண் பக்தர்கள் அவருக்கு கற்பூர தீபம் ஏற்றி தீபாராதனை செய்து வழிபட்டனர்.

மேலும், சில ஆண்கள், பெண்கள் அவரது காலில் விழுந்து வணங்கினர். அப்போது தெரிவித்த அவர் ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நடத்த இடம் தேடி அலைய வேண்டி உள்ளது. அதற்காக என்னிடம் உள்ள பணத்திற்கு இங்குதான் இடம் வாங்க முடிந்தது. இங்கு ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீக பணியை தொடர உள்ளேன். நான் அருள்வாக்கு சொல்வதில்லை, ஆன்மீகத்தைத்தான் சொல்லிகொடுத்து வருகிறேன்.

எனது இரண்டாவது கணவர் அரசு சிலை இங்கு ஆசிரமத்தில் தான் உள்ளது. நாங்கள் இரண்டு பேருமே இல்லாமல் ஆன்மீகம் இல்லை. என்னை அழிக்க யாராலும் முடியாது என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் தான் சாமியார் இல்லை கடவுள் என்று அவருக்கு தானே கோயில் கட்ட முடிவு செய்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோயில் கட்டுவதற்கான பணிகளை துவங்கி கோயிலையும் கட்டி முடித்துள்ளார்.

கோயில் என்றாலே கோயிலுக்குள் கடவுளின் திருவுரு சிலை இருக்கும். ஆனால் அன்னபூரணி அரசு அம்மா கட்டிய கோயிலில் தன்னுடைய உருவத்தை சிலையாக செய்து அங்கு கடவுள் சிலை போன்று அமைத்துள்ளார்.

மேலும் கோயிலின் கும்பாபிஷேகத்தின் போது அன்னபூரணி அரசு அம்மா அம்மன் வேடத்தில் இருந்தார். அன்னபூரணி அம்மா அரசுவிற்கு ஆண்கள், பெண்கள் என அனைவரும் பாத பூஜை செய்து காலினை தொட்டு வணங்கிச் சூடம் ஏற்றி வழிபட்டனர். அப்போதும் அசராமல் நின்ற, அன்னபூரணியிடம் பலர் ஆசிபெற்றனர். 

Tags:    

Similar News