தமிழக முதல்வருக்கு நன்றி -திருநங்கைகள்

கொரோனா நிவாரணநிதி வழங்கிய தமிழக முதல்வருக்கு திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Update: 2021-06-04 06:37 GMT

தமிழக முதல்வருக்கு நன்றி  தெரிவித்த திருநங்கைகள்.

கொரோனா இரண்டாவது அலையின் ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் திருநங்கைகள் வருமானமின்றி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திருநங்கைகளுக்கு ரூ,2 ஆயிரத்தை கொரோனா நிதியாக அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த புக்கத்துரை நடராஜபுரம் பகுதியில் வசிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட திருநங்கைகள் நன்றி தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் இந்தியாவின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சத்தியஸ்ரீ ஷர்மிளா கூறுகையில்:-

குடும்ப அட்டை உள்ள மற்றும் இல்லாத அனைத்து திருநங்கைகளுக்கும் ரூ,2 ஆயிரம் வழங்கி ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மேலும் அரசு சாதாரண கட்டண பேருந்துகளில் இலவசமாக பயணிக்க உத்தரவு பிறப்பித்த முதல்வருக்கு ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள திருநங்கைகள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக அவர் கூறினார். 

#Transgender #திருநங்கைகள் #நிவாரணநிதி #tamilnadu #chiefminister #covid #coronavirus #coronaspread #stayhome #stay safe #TNCM #Instanews #fund #இன்ஸ்டன்யூஸ் 

Tags:    

Similar News