இன்று பள்ளிகள் திறப்பு: ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்

1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், ஆர்வமுடன் பள்ளிகளுக்கு வந்த மாணவர்கள்

Update: 2021-11-01 04:45 GMT

மாணவர்களை வரவேற்கும் பள்ளி ஆசிரியர்கள்

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த ஆண்டு (2020) மார்ச்சில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தொடர்ந்து பள்ளிகளும், கல்லூரிகளும் மூடப்பட்டன. பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், பள்ளிகள்-கல்லூரிகள் மட்டும் திறக்கப்படாமலே இருந்து வந்தன. கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து, 17 மாதங்களுக்கு பிறகு கடந்த செப்டம்பர் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூர்கள் திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன.

இந்நிலையில், தற்போது கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில், 19 மாதங்களுக்கு பிறகு 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 1072 பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. இதில் 2 லட்சத்து 52 ஆயிரம் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். பள்ளிக்கு வரும் மாணவர்களை வரவேற்க சிறப்பு ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகம் சார்பில் செய்திருந்தனர்.

பள்ளிகளுக்கு வரும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் அனைவரும் அவர்களுக்கு நுழைவுவாயிலிலேயே உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக ஓவியம், கதை, பாடல், விளையாட்டு உள்பட மனமகிழ்ச்சி செயல்பாடுகளை பள்ளிகள் திறந்ததும் 10 முதல் 15 நாட்களுக்கு நடைமுறைப்படுத்த அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம். ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஆன்லைன் வழிக்கல்வியையும் தொடரலாம் என்றெல்லாம் அந்த உத்தரவில் கூறப்பட்டது. அதனை பின்பற்றியே இன்று 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் இன்று தொடங்கியது.

Tags:    

Similar News