ஊரடங்கை சுற்றிப்பார்க்க வந்தவர்களின் வாகனங்கள் பறிமுதல்

செங்கல்பட்டில் ஊரடங்கு எப்படி இருக்கிறது என சுற்றிப்பார்க்க வந்தவர்களின் 200 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-05-17 12:30 GMT

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது அலையில், தொற்று அதிகரித்துள்ளது. வீடுகளில் பாதுகாப்புடன் இருக்கவும், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து வெளியே வர வேண்டாம் என மக்களுக்கு போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தொடர்ந்து அலட்சியத்துடன் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, இன்று காலைமுதல் செங்கல்பட்டில் ஊரடங்கு நேரத்தில் பகுதி முழுவதும் எப்படி இருக்கிறது என ஊர் சுற்றிபார்க்க வந்தவர்களின் 200க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

முககவசம் அணியாதது தொடர்பாக, ஆயிரத்து, 60 வழக்கு, சமூக இடைவெளியை பின்பற்றாதது தொடர்பாக, 50க்கும் மேற்பட்ட வழக்குகளும் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.

Tags:    

Similar News