செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் 57 குண்டுகள் முழங்க வீரவணக்கம் செலுத்தப்பட்டது

Update: 2021-10-21 04:45 GMT

செங்கல்பட்டு ஐடிஐ மைதானத்தில் மாவட்ட காவல் துறை சார்பாக நடைபெற்ற வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி 

பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ஆம் தேதி வீரவணக்க நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்படுகிறது.

1959ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்ட இந்திய ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். இந்த சம்பவத்தை அடுத்து பணியின்போது உயிரிழக்கும் காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

அவர்களின் நினைவாக இன்று செங்கல்பட்டு ஐடிஐ மைதானத்தில்  மாவட்ட காவல் துறை சார்பாக வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் குமார், ஏ.எஸ்.பி ஆதர்ஷ் பச்சேரொ, ஏ.டி.எஸ்.பி கங்கைராஜ் மற்றும் 5 டி.எஸ்.பிக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அதனை தொடர்ந்து காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு நிகழ்ச்சியின் உச்ச நிகழ்வாக 57 குண்டுகள் முழங்க வீரமரணமடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

Tags:    

Similar News