சமூக இடைவெளியின்றி இன்றுகாலை செங்கல்பட்டு மார்க்கெட்டில் திரண்டமக்கள்!

இன்று ஊரடங்கு தளர்வு செய்ப்பட்டதால் கொரோனா விதிகளை மறந்து செங்கல்பட்டு மார்க்கெட்டில் மக்கள் திரண்டனர்.

Update: 2021-05-23 02:44 GMT

சமூக இடைவெளியை மறந்து செங்கல்பட்டு மார்கெட்டில் திரண்ட மக்கள்

தமிழகத்தில் கொரொனா வைரஸ் இரண்டாவது அலை அதிதீவிரமாக பரவி வரும் நிலையில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டில் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த இரு வாரங்களாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. கொரொனா கட்டுக்கடங்காமல் செல்வதால் நாளை முதல் மேலும் ஒரு வார காலத்துக்கு முழு ஊரடங்கு நீட்டி தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் இன்று வரை முழு தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக செங்கல்பட்டு மார்க்கெட் பகுதியில் கொரொனா கட்டுப்பாடுகளை காற்றில் வீசியபடி பொதுமக்கள் கூட்ட நெரிசலாக காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.

இதன் காரணமாக கொரொனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

Tags:    

Similar News