செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பின

தொடர்ந்து பெய்த கனமழையால், செங்கல்பட்டு மாவட்டத்தில் 61 ஏரிகள் 100% நிரம்பியது

Update: 2021-11-06 05:30 GMT

குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி,  தென்மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் நிலை கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. கடந்த ஆறு தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது.நேற்று  செங்கல்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் மிதமான மழையும்,  ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.

மழையின் காரணமாக,  பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு சில விவசாய பகுதிகளில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டன.  தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு, நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 528 ஏரிகள் உள்ளது இதில் 61 ஏரிகள் 100% நிரம்பி உள்ளன.

மேலும், 75 சதவீதத்துக்கு மேல் 65 ஏரிகளும், 50 சதவிகிதத்திற்கு மேல் 128 ஏரிகளும்,  25 சதவீதத்திற்கு மேல் 207 ஏரிகளும், 25 சதவிகிதத்துக்கும் கீழ்,  67 ஏரிகள் நிரம்பி உள்ளன. தொடர்ந்து ஏரிகளின் நீர்வரத்தை கவனித்து வருவதாகவும், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தி உள்ளதாகவும்,  பொதுப்பணித்துறை சார்பிலும், நீர்வள ஆதாரத்துறை சார்பிலும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags:    

Similar News