கூடுவாஞ்சேரியில் இடுப்பளவு வெள்ளம்: தத்தளித்தவர்கள் படகு மூலம் மீட்பு

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில், இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்தவர்கள், படகு மூலம் மீட்கப்பட்டனர்.

Update: 2021-11-12 02:30 GMT

கூடுவாஞ்சேரியில்,  இடுப்பளவு வெள்ளத்தில் தத்தளித்த மக்களை,  படகு மூலம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நந்திவரம் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. நேற்று இரவு மகாலட்சுமி நகரில் வசிக்கும் மக்கள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருப்பதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் கொடுத்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கூடுவாஞ்சேரி தீயணைப்பு மீட்புத் துறையினர்,  நேற்றிரவு நேரில் சென்று வெள்ள நீரில் சிக்கிய 30க்கும் மேற்பட்டோரை,  படகு மூலம் பத்திரமாக மீட்டு,  நந்திவரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்கவைத்த்துள்ளனர்.

வருடாந்திரம்தோறும் லேசான மழை பெய்தாலே,  மகாலட்சுமிநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளநீர் புகுந்து பெருத்த சேதத்தை விளைவிக்கிறது. முறையான வடிகால் கால்வாய்காலை அமைக்கவேண்டும். குறிப்பாக ஆக்கிரமிப்புகளை அகற்றி மழைவெள்ளம் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News