ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளியாகும் நச்சுத்துகளால் ஆபத்து

செங்கல்பட்டு அருகே ரப்பர் தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கருப்பு நச்சுத்துகள்கள் மழைநீரில் கலந்து நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-11-08 07:30 GMT

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் பகுதியில் உள்ள தொழிற்சாலை நச்சுத்துகள், மழை நீரில் கலந்துள்ளது. 

செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரம் பகுதியில், 15 ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் இரப்பர் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் கரும்புகையின் காராணமாக,  அங்குள்ள மக்களுக்கு சுவாச கோளாறு உள்பட பல நோய்கள் வருவதாக, துறைசார்ந்த அதிகாரிகளிடம் புகார் மனுக்களை அளித்துள்ளனர். பலகட்ட போராட்டங்களையும் முன்னெடுத்துள்ளனர். ஆனால் இதுநாள் வரையில் அந்த ரப்பர் தொழிற்சாலை நிர்வாகத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களாக செங்கல்பட்டில் பெய்து வரும் மழையால், ரப்பர் தொழிற்சாலையில் இருந்ந்து வெளிவரும் கரும் நச்சு துகள்கள்,  மழைநீரில் கலந்து திம்மாவரம் ஊராட்சிமன்ற கட்டிடம், நியாயவிலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவகங்கள் இயங்கும் பகுதியில் தேங்கி துர்நாற்றம் வீசிவருகிறது. இதன் காராணமாக ஊராட்சிமன்ற கட்டிடம், நியாயவிலைக்கடை, கிராம நிர்வாக அலுவலகம் ஆகியவை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. எனவே அப்பகுதியில் இயங்கிவரும் ரப்பர் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டும், அந்நிர்வாகத்தின் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், என்பதே பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News