சிறு அருவிகளால் ரம்மியமாக காட்சி அளித்த செங்கல்பட்டு மலைகள்

தொடர் மழை காரணமாக செட்டிபுண்ணியம் மலை மீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி ரம்மியமாக காட்சியளிக்கிறது

Update: 2021-11-27 11:15 GMT

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது இதனை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரே இரவில் கடுமையான மழை பெய்து நிலைமையே புரட்டிப் போட்டது. இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது.

இதில் செங்கல்பட்டு அருகே உள்ள செட்டிபுண்ணியம் மலைமீது ஆங்காங்கே சிறு சிறு அருவிகள் தோன்றி, சிறு ஓடைகளில் நீர் வழிந்து ஊட்டியை போல் குளிர்ந்த சூழ்நிலையாக மாறி ரம்மியமாக காட்சியளிக்கிறது. இதனை காண சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அங்கு குவிந்து வருகின்றனர்.

Tags:    

Similar News