செங்கல்பட்டு: சாலை ஓரம் கொட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவ கழிவுகளால் பீதி!

செங்கல்பட்டு- பொன்விளைந்த களத்தூர் செல்லும் சாலையில் கொட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவ கழிவுளால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

Update: 2021-06-10 12:43 GMT

சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கொரோனா மருத்துவ கழிவுகள் சிதறிகிடப்பதை காணலாம்.

மருத்துவமனைகளில் பயன்படுத்திய பேண்டேஜ் துணிகள், கை உறைகள், மருந்து பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்கள் கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கழிவுகள் போன்ற மருத்துவக் கழிவுகளை குறிப்பிட்ட நாட்களில் மருத்துவக் கழிவு மேலாண்மை மையத்தினர் எடுத்துச்சென்று இன்சினரேஷன் மூலம் அதிக வெப்பநிலையில் அழிக்கப்படும்.

இந்நிலையில், செங்கல்பட்டு- பொன்விளைந்த களத்தூர் செல்லும் சாலையில் ஏரிக்கரை அருகே மருத்துவக் கழிவுகள் கொண்ட மூட்டைகள் கொட்டப்பட்டுள்ளன. அதில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருந்து பாட்டில்கள், சிரஞ்சிகள், ரத்தம் உறைந்த பஞ்சுகள், கையுறைகள், முழு உடல் கவசம், முக கவசம் போன்றவை இருந்தன.

சில தனியார் மருத்துவமனைகளின் ஊழியர்கள்தான் அடிக்கடி இரவு நேரங்களில் சாலையோரங்களில் மருத்துவக் கழிவுகளை கொட்டிவிட்டுச் செல்வதாக கூறப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் உள்ளது. உடனடியாக அவற்றை அகற்ற வேண்டும். சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News