செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்துக்கு பூட்டு: காவலர்கள் தவிப்பு

செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையம் இன்று காலை முதல் பூட்டப்படதால் சக காவலர்கள் தவித்து வருகின்றனர்.

Update: 2021-05-11 08:30 GMT

காவல்நிலையம் பூட்டப்பட்டதால் பரிதாபமாக அமர்ந்திருக்கும் மகளிர் போலீசார்.

செங்கல்பட்டு மாவட்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஒரு பெண் ஆய்வாளர், 16 பெண் காவலர்களும் ஒரு உதவி ஆய்வாளர் என பணிபுரிந்து வருகின்றர்.

இந்த நிலையில் மறைமலைநகரில் போக்சோ வழக்கு தொடர்பாக நிதிமன்றத்துக்கு அழைத்துவர மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் ராஜாமணி அருள்மொழிதேவி, இன்று அதிகாலையில் புறப்பட்டுள்ளார். இந்த வழக்குக்கு தேவையான ஆவணங்களை காவல்நிலையத்திலிருந்து எடுத்துச்செல்ல வந்ததும், சக பெண் காவலர்களை விரைவாக வரும்படி கூறியுள்ளார். காலை 6 மணி ஆனபோதும் சக காவலர்கள் வராத காரணமாக ஆத்திரமடைந்த பெண் ஆய்வாளர் காவல்நிலையத்தை பூட்டிவிட்டு சாவியை எடுத்துகோண்டு மறைமலைநரகர் காவல்நிலையத்துக்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நீண்ட நேரம் கழித்து சக பெண் காவலர்கள் மகளிர் காவல்நிலையத்துக்கு வெளியே கால்கடுக்க காத்துக்கிடந்தனர். இவர்களுடன் மனு அளிக்க வந்த பெண்களும் நீண்டநேரமாக காத்துக்கிடக்கும் நிலை உருவானது.

பின்னர் 12 மணிக்கு காவல்நிலையத்துக்கு வந்த பெண் ஆய்வாளர் முனுமுத்துக்கொண்டே பெண் உதவி ஆய்வாளரை திட்டியபடி காவல்நிலைய சாவியை காவலர்கள் முன்னே தூக்கி எரிந்தார். பின்னர் காவல்நிலையம் திறக்கப்பட்டன. காலை முதல் 6 மணிநேரம் அனைது மகளிர் காவல்நிலையம் பூட்டப்பட்ட சமபவம் பரபரபை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News