எந்த திசையில் தலை வைத்து தூங்க வேண்டும்?: 'நச்'னு நாலே வரியில்..

Which Direction is Best to Sleep in Tamil-இரவில் உறங்கும்போது எந்த திசையில் தலைவைத்து படுக்க வேண்டும் என நம் முன்னோர்கள் நாலே வரியில் அழகாக விளக்கியுள்ளனர்.

Update: 2021-12-11 07:35 GMT

Which Direction is Best to Sleep in Tamil-வீட்டில் நாம் உறங்கும்போது இந்த திசையில் தலை வைக்காதே, அந்த திசையில் தலை வைத்து படுக்காதே என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூற கேட்டிருப்போம். எந்த திசையில், எந்த சமயத்தில் படுக்க வேண்டும் என நம் முன்னோர்கள் நாலு வரி பாடல் மூலம் தெளிவாக கூறியுள்ளனர்.

தன்ஊர் கிழக்கு

தங்கியஊர் மேற்கு

வேற்றுஊர் தெற்கு

வேண்டாதஊர் வடக்கு

அவ்வளவு தாங்க இந்த பாடல். ஆனால் அதனுள் பொதிந்து கிடக்கும் உண்மைகள் நம்மை பிரமிக்க வைக்கும்.

தன்ஊர் கிழக்கு: நமது சொந்த ஊராக இருந்தால், நாம் கிழக்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். காரணம், கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பதால், காலையில் சூரிய ஒளி நம் முகத்தில் விழாது. நிதானமாக எழுந்து கொள்ளலாம்.

தங்கியஊர் மேற்கு: அந்த காலத்தில் வெளியூர் பயணம் மேற்கொள்பவர்கள், இரவு நேரத்தில் எதாவது ஊரில் தங்க வேண்டியிருக்கும். அந்த காலத்தில், சத்திரம் சாவடி போன்ற இடத்தில் தான் தங்க வேண்டியிருக்கும். அதிகாலை எழுந்து கிளம்பி செல்ல வேண்டியிருக்கும்.

அது போன்ற ஊர்களில், மேற்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும். காரணம், சூரியன் உதிப்பதற்கு முன்பு கிழக்கு வெளுத்து அந்த வெளிச்சம் முகத்தில் படும். அதன் காரணமாக அதிகாலையில் எழுந்து விடுவோம். அடுத்த ஊருக்கான பயணத்தையும் விரைந்து மேற்கொள்ளலாம்.

வேற்றுஊர் தெற்கு: வேறு ஊரில் சென்று தங்குவதாக இருந்தால், அவர்கள் தெற்கு திசையில் தலை வைத்து படுக்க வேண்டும். ஏனெனில், நாம் மல்லாக்க படுத்தாலும் சரி, ஒருக்களித்து படுத்தாலும் சரி, காலையில் சூரியன் உதித்ததும் வெளிச்சம் பட்டு நாம் எழுந்து கொள்வோம்.

வேண்டாதஊர் வடக்கு: அச்சமும், ஆபத்தும் நிறைந்த ஊர்களில் வேறு வழியின்றி நாம் தங்க நேர்ந்தால், அந்த ஊரில் வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க வேண்டும். வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கும் போது சரியான உறக்கம் வராது. ஆபத்தான ஊர்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே வடக்கு பக்கம் தலை வைத்து படுக்க கூறியுள்ளனர்.

ஆனால், தற்கால அறிவியலாளர்கள், வடக்கு திசையில் தலை வைத்து படுத்தால், உடல் ஆரோக்கியம் கெடும் என கூறுகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News