திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை வெளியீடு!

Tirupur News- பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாக உள்ள நிலையில், திருப்பூர் மாவட்டத்துக்கு முதலிடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Update: 2024-05-05 18:19 GMT

Tirupur News- பிளஸ் 2 பொதுத்தேர்வில், திருப்பூர்  மாவட்டம் முதலிடம் பிடிக்குமா? ( மாதிரி படம்)

Tirupur News, Tirupur News Today- கடந்த கல்வியாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்ற திருப்பூர், இம்முறை, முதலிடம் பெறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவில், கடந்த, 2021 - 2022 ம் கல்வியாண்டில் மாநிலத்தில், ஐந்தாமிடம் பெற்ற திருப்பூர், கடந்த, 2022 - 2023 ம் கல்வியாண்டில் மூன்று இடங்கள் முன்னேறி, இரண்டாமிடம் பெற்றது. 24 ஆயிரத்து, 732 பேர் தேர்வெழுதி, 24 ஆயிரத்து, 185 பேர் தேர்ச்சி பெற்றனர்; தேர்வெழுதியவர்களில், 547 பேர் மட்டும் தேர்ச்சி பெறவில்லை. 97.79 தேர்ச்சி சதவீதம் பெற்று திருப்பூர் மாநிலத்தில் இரண்டாமிடம் பெற்று பாராட்டுக்களை பெற்றது.

நுாறு சதவீத தேர்ச்சி பெற வைத்த பள்ளி தலைமை ஆசிரியர்கள், முக்கிய பாடங்களில் சென்டம் பெற உதவிய வகுப்பாசிரியர் உட்பட ஆசிரிய, ஆசிரியைகளுக்கு மாவட்ட நிர்வாகம், கல்வித்துறை சார்பில் காங்கயத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. நடப்பு 2023 - 2024ம் கல்வியாண்டுக்கு மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடந்தது. மாவட்டத்தில், 23 ஆயிரத்து, 636 மாணவர்கள் தேர்வெழுதியுள்ளனர்.

சாதனை படைக்குமா?

கடந்தாண்டு இரண்டாமிடம் பெற்றாலும், 2019, 2020 அடுத்தடுத்த ஆண்டுகள் முதலிடம் பெற்று பாராட்டுகளை அள்ளியது, திருப்பூர். 2022 ல், 97.79 சதவீதத்துடன் இரண்டாமிடம் பெற்ற திருப்பூர், நடப்பு கல்வியாண்டு முதலிடம் பெற்றால், மூன்று முறை பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதலிடம் பெற்ற மாவட்டம் என்ற புதிய சானையை படைக்க முடியும்.

2022 - 2023 கல்வியாண்டில் பணியில் இருந்த சி.இ.ஓ., திருவளர்ச்செல்வி, பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் முன், ஆசிரியர் தேர்வு வாரிய துணை இயக்குனராக பதவி உயர்வு பெற்றார். தேர்ச்சி முடிவு வெளியாகும் போது அவர் பணியில் இல்லை. அடுத்த சில நாட்களில் திருச்சி சி.இ.ஓ., வாக இருந்த பாலமுரளி, மே மாதம் திருப்பூர் வந்தார். மூன்று மாதம் மட்டுமே பணியில் இருந்த அவர், ஆக., மாதம் கோவைக்கு மாற்றப்பட்டார். ராணிப்பேட்டை சி.இ.ஓ., உஷா திருப்பூருக்கு மாற்றப்பட்டாலும், பதவியேற்கும் முன் வேறு மாவட்டத்துக்கு மாற்றப்பட்டார். ஒரு வழியாக கரூர் சி.இ.ஓ., உஷா செப்., துவக்கத்தில் திருப்பூருக்கு வந்தார். அவர் எட்டு மாதங்கள் பணியில் இருந்த நிலையில், நாளை பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட உள்ளார்.

Tags:    

Similar News