டிப்பர் லாரி மோதியதில் முதியவர் பலி

ஜெயங்கொண்டம் அருகே டூவிலரில் சென்ற முதியவர் மீது டிப்பர் லாரி மோதியதில் தலை துண்டித்து சம்பவ இடத்திலேயே பலி.;

Update: 2021-08-14 13:39 GMT

ஜெயங்கொண்டம் அருகே டூவிலரில் சென்ற முதியவர் மீது டிப்பர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன். இவர் தனது டூவிலரில் காலியான சிலிண்டர் மற்றும் பால் வாளி உள்ளிட்டவைகளை எடுத்துக் கொண்டு,  ஜெயங்கொண்டம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது , கீழக்குடியிருப்பு கிராமம் பஸ் நிறுத்தத்தில் ஜெயங்கொண்டம்- விருத்தாச்சலம் ல் வந்து கொண்டிருந்த போது அவருக்கு பின்னால் வந்த  டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக , சுந்தரேசன் மீது மோதியதில் சுந்தரேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News