அரியலூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து ஏஐடியுசி சார்பில் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 14 வருட இபிஎஃப் கணக்கை வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது;
அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட 14வருட இபிஎஃப் கணக்கு வழங்க வலியுறுத்தி தஞ்சாவூர் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு ஏஐடியூசி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அரியலூர் ஏ ஐ டி யூ சி சுகாதார தொழிலாளர் சங்கத்தின் சார்பில் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தலையிட வலியுறுத்தி தஞ்சாவூர் மண்டல இயக்குனர் அலுவலகம் முன்பு உள்ளாட்சி துறை பணியாளர் சம்மேளன மாநில செயலாளர் டி.தண்டபாணி தலைமையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தினை ஏஐடியூசி தேசிய நிர்வாக குழு உறுப்பினர் வழக்கறிஞர் சி.சந்திரகுமார் தொடக்கி வைத்தார். மாநில செயலாளர் ஆர். தில்லைவனம் நிறைவு செய்து வைத்து பேசினார்.
கோரிக்கைகளை விளக்கி அரசு போக்குவரத்து சங்க மாநிலத் துணைத் தலைவர் துரை.மதிவாணன், தெரு வியாபார சங்க மாவட்ட செயலாளர் ஆர் பி.முத்துக்குமரன், மின்சார தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில துணைத்தலைவர் பொன்.தங்கவேல், அரியலூர் மாவட்ட செயலாளர் ரெ.நல்லுச்சாமி, கட்டுமான சங்க மாவட்ட துணை தலைவர் பி.செல்வராஜ், அரியலூர் ஏ ஐ டி யூ சி நிர்வாகிகள் ஆர். தனசிங், ஜி. ஆறுமுகம், டி ஜீவா ஆகியோர் உரையாற்றினார்கள்.
நகராட்சி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் மாரியப்பன், அமிர்தவல்லி, அஞ்சலை, பானுமதி, நாகூரான், விஜி, உஷா, ஆர்.ராணி , ஆறுமுகம் உள்ளிட்ட சுகாதார தொழிலாளர்கள் பங்கேற்றனர். அரியலூர் நகராட்சி தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட இபிஎப் 14 வருட கணக்கை எழுத்து பூர்வமாக வழங்க வேண்டும், அரசாணை 62 இன் படி நிர்ணய ஊதியம் ரூ 15,848 வழங்கிட வேண்டும்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி 31 மாதத்திற்கானத்தை தினக்கூலி சம்பள அரியர்ஸ் பணத்தை திருச்சி மாவட்ட தொழிலாளர் அலுவலர் முன்பு ஒப்புக் கொண்டவாறு அரியலூர் நகராட்சி நிர்வாகம் வழங்க வேண்டும், ஜெயங்கொண்டம் நகராட்சியில் 27 ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்ததை திரும்ப பெற வேண்டும், குறைந்த சம்பளத்தில் ஆள் எடுப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட து.