2021 புத்தாண்டை உற்சாகமாக வரவேற்ற பொதுமக்கள்

2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டாலும், 2021 ஆம் ஆண்டை நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் வரவேற்பதாக கூறினார்கள்

Update: 2021-01-01 05:12 GMT

2021 புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியாக கேக் வெட்டி, பட்டாசு வெடித்து கொண்டாடி வரவேற்றனர்.

2020 ஆம் ஆண்டு ஆண்டு பல்வேறு சோதனைகள் இருந்தாலும், 2021 ஆம் ஆண்டு புத்தாண்டை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் கேக் வெட்டினார்கள். வெட்டிய கேக்கை தங்கள் நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது அவர்கள் 2020 ஆம் ஆண்டு கொரோனாவால் பல்வேறு சோதனைகள் ஏற்பட்டாலும், 2021 ஆம் ஆண்டை நம்பிக்கையுடனும் சந்தோசத்துடனும் வரவேற்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

Similar News