பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..!

தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட கலைத்துறை வித்தகர் விருதினை பின்னணிப்பாடகி பி.சுசீலாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2024-10-04 14:14 GMT

கலைத்துறை வித்தகர் விருது பெற்றுக்கொண்ட பின்னணிப்பாடகி பி.சுசீலா. விருது வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சென்னை தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

பாடகி பி.சுசீலா, 70 ஆண்டுகளுக்கும் மேலாக தனது இசைப்பயணத்தில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடி சாதனை படைத்துள்ளார். அவருக்கும், கவிஞர் மு.மேத்தாவுக்கும் 'கருணாநிதி கலைத்துறை வித்தகர் விருது' வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

அந்த அறிவிப்பின்படி இன்று (அக்.4ம் தேதி ) சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்ட அந்த விருதுகள் வழங்கப்பட்டன. தனது குடும்பத்துடன் வந்திருந்த பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கி அவரிடம் சிறிது நேரம் உரையாடினார். விருதுடன் ரூ.10 லட்சம் ரொக்கமும், நினைவுப்பரிசும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சியில், கவிஞர் மு.மேத்தாவுக்கும் முதல்வர் ஸ்டாலின் விருது வழங்கி கௌரவித்தார்.

பி.சுசீலாவுக்கு வழங்கப்பட்ட இந்த விருது, அவரது 60 ஆண்டு கால இசைப் பயணத்திற்கான அங்கீகாரமாகும். இது இளம் பாடகர்களுக்கு ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை. சென்னையின் இசை மரபில் சுசீலாவின் பங்களிப்பு என்றென்றும் நினைவில் நிற்கும்.

Tags:    

Similar News