நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களுக்கு 7 நாட்கள் போலீஸ் கஸ்டடி

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்தவர்களை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.

Update: 2023-12-14 17:49 GMT

நாடாளுமன்றத்திற்குள் அத்துமீறி நுழைந்ததற்காக கைது செய்யப்பட்ட இருவர்.

நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று வழக்கம் போல் அவை நடவடிக்கைகள் தொடங்கி நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது லோக்சபாவின் பார்வையாளர் மாடத்தில் இருந்த 2 பேர் அத்துமீறி உள்ளே நுழைந்தனர். அவர்கள் தங்களது கைகளில் கொண்டு வந்த புகை பொருட்களை லோக்சபாவில் வீசினர். லோக்சபாவுக்குள் இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்.

இதேபோல நாடாளுமன்றத்துக்கு வெளியே நின்று புகை பொருட்களை வீசிய மேலும் 2 பேரும் மடக்கிப் பிடிக்கப்பட்டனர். இந்த சம்பவங்களில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஒருவர் தலைமறைவாக உள்ளார். மகாராஷ்டிரா, ஹரியானாவை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநில பா.ஜ.க. எம்.பி ஒருவரிடம் இருந்து பெற்ற பார்வையாளர் நுழைவுச் சீட்டு மூலமே இந்த 2 பேரும் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற பாதுகாப்பு அதிகாரிகள் 7 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் வழக்கம் போல கூடியது. நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். அவை கூடியதும் உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இரு அவைகளிலும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். உள்துறை அமைச்சர் விளக்கம் அளிக்கக் கோரி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து அவை நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக எதிர்க்கட்சி எம்.பிக்கள் 15 பேர் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். 15 எம்.பிக்களில் 9 பேர் காங்கிரஸ் கட்சியையும், திமுகவில் இருந்து இரண்டு பேர், சிபிஎம் கட்சியில் இருந்து 2 எம்.பி. சிபி.ஐ கட்சியில் இருந்து ஒரு எம்.பியும் அடங்குவர்.

இதுதொடர்பாக மொத்தம் 4பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது உபா உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கைதானவர்களில் ஒருவர் கர்நாடக மாநிலத்தயைும் இன்னொருவர் மகாராஷ்டிரா மாநிலத்தையும், இன்னொருவர் அரியானா மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இந்த விவகாரம் தொடர்பாக 8 பாதுகாப்பு பணியாளர்களை மக்களவை செயலகம் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட 4 பேரும் டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு 15 நாள் காவலில் எடுத்து விசாரிக்கபோலீசார் கோரிக்கை விடுத்தனர். ஆனால் 7 நாள் அவகாசம் கொடுத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து போலீசார் அவர்களை தங்களது கஸ்டடியில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News