மாதாந்திர உதவித்தொகையுடன் பிரதமரின் தொழிற்பயிற்சி திட்டம்!
Prime Minister's Internship Scheme -PMIS திட்டத்தில் தொழில் பயிற்சி பெறுவோருக்கு ஒராண்டுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படுகிறது.;
(Prime Minister's Internship Scheme -PMIS) திட்டத்தில் தொழில் பயிற்சி பெறுவோருக்கு ஒராண்டுக்கு மாதம் ரூ.5,000 நிதியுதவி அளிக்கப்படும். மேலும், ஒரு முறை மானியமாக ரூ.6,000 வழங்கப்படும். மொத்தம் தொழிற்பயிற்சி பெறுவோருக்கு ரூ.66,000 கிடைக்கும்.
இத்திட்டத்தில் சிஎஸ்ஆர் நிதி அடிப்படையில் 500 முன்னணி நிறுவனங்கள் பதிவு செய்யவுள்ளன. இன்றுவரை 111 முன்னணி நிறுவனங்கள், அரசின் இணையதளத்தில் பதிவு செய்து 1079 பேருக்கு தொழில்பயிற்சி வழங்குவதாக அறிவித்துள்ளன.
தகுதி: 21 வயது முதல் 24 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பெண்கள். ITI, polytechnic, bachelor degree, diploma முடித்தவர்கள்.
தேதி: வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதியானவர்களின் பட்டியலை அக்டோபர் 26-ம் தேதி கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிடும். விண்ணப்பதாரர்களை நிறுவனங்கள் நவம்பர் 7-ம் தேதி வரை தேர்வு செய்து, பயிற்சி அளிப்பதற்கான கடிதத்தை வழங்கும். சொந்த மாவட்டம் அல்லது அருகில் உள்ள மாவட்டங்களில் பயிற்சி அளிப்பதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்படும்.
நிதி ஒதுக்கீடு: ரூ.800 கோடி
திட்ட இலக்கு: 5 ஆண்டு காலத்தில் 1 கோடி பேருக்கு தொழிற் பயிற்சி அளித்து அவர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்தல். இதன் மூலம் அவர்கள் வாழ்வின் சமுதாய பொருளாதார உயர்வினை ஏற்படுத்தித் தருதல்.
விண்ணப்பிக்க இணையம்: www.pminternship.mca.gov.in