ஊழல்வாதிகளை ஏன் தண்டிக்க முடியவில்லை..?

ஊழல்வாதிகளை பிடித்து உள்ளே போட்டு, ஒரு வழி பண்ணாமல் வேடிக்கை பார்க்கிறாரே, 10 வருட சாதனையா இது?

Update: 2024-10-07 07:54 GMT

பிரதமர் மோடி 

இந்த நாட்டின் விடுதலைக்கு சாக எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்காக வாழும் ஒரு சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளது என்கிறார் நமது பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவர் சொன்னதை, கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால், புரியும்.

அப்படிப்பட்ட நரேந்திர மோடி ஏன் ஊழல்வாதிகளை தண்டிக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறார். எல்லார் மனதிலும் இந்த கேள்வி கண்டிப்பாக இருக்கும். என் மனதிலும் இருந்தது. யதேச்சையாக ஒரு முக்கிய தேசவுணர்வு மிக்க வழக்கறிஞருடன் (பெயரெல்லாம் வேண்டாம்) இதை குறித்து பேசிய போது, பொறிந்து தள்ளி விட்டார். அவர் ஒரு முதல்வர் சம்மந்தப்பட்ட வழக்கை கையாள்பவர். அவர் கூறிய கருத்துக்களை அப்படியே தருகிறோம்.

முதலாவது பாஜக ஆதரவாளர்கள் அடிப்படையை புரிந்து கொள்வதில்லை என்பதை அவர் மிகத் தெளிவாக கூறினார். முக்கிய இரண்டு விஷயங்கள் மட்டும் சொல்கிறேன். மற்றவற்றை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள். புரியாதவர்களை பற்றி கலவலையில்ல.

1) ED, NIA, CBI போன்ற அமைப்புகள்

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அதிகம் தன்னாட்சியாக இயங்கப்படவில்லை மற்றும் வழக்கு போட்டு விட்டால் போதும், அதனை தொடர்ந்து நடத்த வேண்டிய அவசியமில்லை என்பதால் அதில் தேவையான அளவு ஆட்களை நிரப்பவில்லை.

சார்ஜ் ஷீட் போன்றவற்றை, பக்கவாக செய்யும் பயிற்சி ED, NIA, CBI பணியாளர்களிடம் இல்லை. இதுவரையிலும் ஏனோ தானோ என செய்வதை மட்டுமே  பழகி இருந்தனர். அவர்களுக்கு தேவையான பயிற்சி பெற்ற வழக்கறிஞர்களும் கொடுக்கப் படவில்லை. ஒரு வழக்கறிஞரிடமே பலநூறு வழக்குகளுக்கு பொறுப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

மோடி கடந்த 10 ஆண்டுகளாக பல வழக்குகளை போட்டு அதன் நகர்வுகளை பார்த்த பின்னர் இதனை புரிந்து கொண்டார். அதன் பின்னர் மத்திய அரசு தேவையான ஆட்களை நிரப்ப, சரியில்லாதவர்களை மாற்ற முயற்சி செய்தது. ஆனால் எகோ சிஸ்டம் அதனை செய்ய விடவில்லை. ஒரு சிபிஐ தலைவர் குறித்து பெரும் பிரச்சினை எழுந்தது ஞாபகம் உள்ளதா? இந்த நியமனங்களில் நீதிமன்றங்களும் உள்ளே புகுந்து குழப்பின.

2) நீதிமன்ற எக்கோ சிஸ்டம்

பல்வேறு வழக்குகளில் சார்ஜ் ஷீட்டில் புள்ளி, கமா சரியாக போடவில்லை என காரணம் காட்டி விசாரணையை மாதக்கணக்கில் சில நீதிபதிகள் இழுத்தடிப்பார்கள். ஏற்கனவே ஆள் பற்றாக்குறை என்பதை உணர்ந்து சில வழக்குகளில் தேவையான நேரத்தை அளிக்க மாட்டார்கள்.

நீதிபதிக்கு நீதிபதி ஒரே விஷயத்தில் வெவ்வேறு கருத்துகளை சொல்வார்கள். பிரிட்டிஷ் கால மனோபாவத்தில் உட்கார்ந்திருப்பார்கள். ஒரு முறை ஒரு முக்கிய அதிகாரி டை கட்டி வரவில்லை என வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதிபதிகளும் இந்த நாட்டில் உள்ளார்கள்.

இதுபோல சொல்ல இயலாத பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி, வழக்குகள் சின்னாபின்னமாவதும், அதன் இடையில் புதிய வழக்குகள் வருவதும், இந்த ஊழல் வழக்குகளில் கண்ணுக்கு தெரியாத ஒரு மகாபாரதப் போர் நடந்து வருகிறது என்பது உங்களுக்கு புரியாது.

இதனை மோடி மற்றும் அவரது டீம் நன்றாக உணர்ந்திருக்கிறது. இதனால் நீதிமன்ற எகோ சிஸ்டத்தை மாற்ற முயன்றாலும், அரசியலமைப்பு சட்டம் மற்றும் மக்களின் ஏகோபித்த ஆதரவு இல்லாத காரணத்தால், சரியாக செயல்பட இயலாமல் தவிக்கின்றனர்.

மோடி 2.0ல் இதனால் அவர் இனி வழக்குகள் அதிகரிக்காத வண்ணம் என்ன செய்ய இயலும் என்பதில் கவனம் செலுத்துகிறார். வங்கி சீர்திருத்தங்கள், GST, money laundering வெளிநாட்டு நிதி உதவி, போலி நிறுவனங்கள் என பல திட்டங்கள் மூலம் ஊழலை குறைக்க முயல்கிறார்.

ஒரு உதாரணம் 140 கோடி மக்கள் வாழும் இந்த நாட்டில் NIA வெறும் 23 இடங்களில் சற்றேரக்குறைய  40-50 அலுவலக ஊழியர்களுடன் இயங்குகிறது. அதனை உணர்ந்தால் அவர்கள் எவ்வளவு நேர்த்தியாக பணி செய்கிறார்கள் என உணர முடியும். இதே பிரச்சினை ED, CBI என எல்லாவற்றிற்கும்  பொருந்தும்.

எதிர்ப்பில்லாமல் கடந்த 50-60 வருடமாக கட்டப்பட்ட எகோ சிஸ்டத்தை, கடுமையான எதிர்ப்புடன் உடைப்பது, அதுவும் 10 வருடத்தில் என்பது அவ்வளவு சுலபமல்ல. உங்களுக்கு வேண்டுமானால் மோடி அந்தளவிற்கு பெரிய ஹீரோ இல்லை என தெரியலாம். எங்களை பொறுத்தவரை அவர் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹீரோ. அவருடைய பணிகளை உங்களால் புரிந்து கொள்ளவே இயலாது என நினைக்கிறேன். இவ்வாறு கூறினார்.

Tags:    

Similar News