பள்ளிக்கூட ஆசிரியைக்கு விடுப்புக்கடிதம் எப்படி எழுதலாம்..? குட்டீஸ்ங்க தெரிஞ்சுக்கங்க..!

Leave Letter in Tamil Fever -விடுப்புக் கடிதம் எழுதுவது முக்கியம் அல்ல. அதை முறையாக எப்படி எழுதவேண்டும் என்பதுதான் முக்கியம். சரியாக எழுதுங்க.

Update: 2023-04-28 08:53 GMT

3rd standard leave letter-விடுப்பு விண்ணப்பம் எழுதுவது எப்படி( கோப்பு படம்)

Leave Letter in Tamil Fever -பல மாணவர்களுக்கு பள்ளியில் படிக்கும்போது முறையான விடுப்பு விண்ணப்பம் எழுதத் தெரியாமல் இருப்பார்கள். கடிதம் எழுதினாலும் முறையாக அதை எழுதத் தெரியாது. அதனால் கீழ் உள்ள வழிகாட்டலின்படி கடிதம் எழுதிப் பழகுங்கள்.

உங்கள் பள்ளி வகுப்பு ஆசிரியருக்கு விடுப்புக்கான விண்ணப்பத்தை எழுதுவதற்கு பின்வரும் படிகள் உங்களுக்கு உதவும்.

1. கடிதத்தைச் சமர்ப்பிக்கும் தேதியை வலது மூலையில் எழுதுங்கள்.(Date )

2. அனுப்புனர் மற்றும் பெறுநர் எழுதவும். அனுப்புனர் முகவரியில் உங்கள் பெயர், தந்தையின் பெயர் மற்றும் நீங்கள் படிக்கும் வகுப்பு. பெறுநர் முகவரியில் வகுப்பு ஆசிரியை, பள்ளி முதல்வர் என்று குறிப்பிடலாம்.( From and To )

3. விழித்தல். அதாவது மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியை, மதிப்பிற்குரிய முதல்வர் என்று கடிதம் யாருக்கு என்பதை குறிப்பிகிட்டு மரியாதை இடுதல், (Respected Ma'am)

4. பொருள் கூறுதல் - என்ன காரணத்துக்காக விடுப்பு என்பதை வலியுறுத்தி (subject )

5. கடிதத்தின் விபரம் கூறுதல். (body of the letter )

6. முடிவு - அதாவது நன்றி கூறுதல், தங்களின் உண்மையுள்ள மாணவன்/மாணவி என்று முடித்தல்

இந்த வழிகாட்டலின்படி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாதிரி கடிதம் தரப்பட்டுள்ளது.

                                                                          விடுப்பு விண்ணப்பம் 


                                                                                                                                                                      ஏப்ரல் 28, 2023


அனுப்புனர்

       எம். கௌபாரி,

        s/o மதுரவன்,

       ராசிபுரம்,

      கோனேரிப்பட்டி,

      நாமக்கல் மாவட்டம்

பெறுநர்

      வகுப்பு ஆசிரியர்,

     வகுப்பு III -A

     கேந்திரிய வித்யா பவன் பள்ளி,

      ராசிபுரம்.


மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியை அவர்கள், 

                                                        பொருள்: இரண்டு நாட்களுக்கு விடுப்பு கேட்டு விண்ணப்பம்.

28 ஏப்ரல் 2023 மற்றும் 29 ஏப்ரல் 2023 ஆகிய இரண்டு நாட்களுக்கு எனக்கு விடுப்பு வழங்குமாறு கேட்டுக் கொண்டு இந்தக் கடிதத்தை தங்களுக்கு எழுதுகிறேன். நான் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் இரண்டு நாட்கள் முழு ஓய்வு எடுக்குமாறு எனது மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார்.

நான் குணமடைந்த பிறகு எனது பாடங்களையும் எழுத வேண்டியவைகளையும் சரியான நேரத்தில் முடிப்பேன் என்று உறுதி கூறுகிறேன்.

நன்றி,


தங்கள் உண்மையுள்ள,

கௌபாரி,

வகுப்பு III-A,

கையெழுத்து

.................................................. ......................


                                                                                 Leave Letter

From                                                                                                                                                                         28th April 2023

             M. Gowpari,

            s/o Madhuravan,

            Rasipuram,

            Koneripatty,

            Namakkal Dt.,

To

The Class Teacher,

Class III -A

Kendriya Vidya Bhavan School,

Rasipuram.

Respected Ma’am,

                                         Subject: Sick leave for two days -reg.

I am writing this letter requesting you to grant me a leave for two days on 28th April 2023 and 29th April 2023. I am suffering from a viral fever, and my doctor has advised me to take complete rest for two days.

I hope to complete my lessons and writings in time after I have recovered.

Thanking You,

Yours sincerely,

Gowpari,

Class III-A,

Signature

.......................................................................

குறிப்பு :

1. அனுப்புனர், பெறுநர் என்று குறிப்பிட்டு புள்ளி அல்லது காற்புள்ளி எதுவும் வைக்கக்கூடாது.

அனுப்புனர், அனுப்புனர்: இப்படி இல்லாமல் அனுப்புனர் என்று குறிப்பிடவேண்டும். பெறுநர் என்பதற்கும் அப்படித்தான் வரவேண்டும்.

2. மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியை அவர்கள், (இங்கு காற்புள்ளி (கமா) வைக்கவேண்டும்)

3. மதிப்பிற்குரிய வகுப்பு ஆசிரியை என்று குறிப்பிட்ட பின்னர் அதன் கீழ்தான் பொருள் (subject)வரவேண்டும்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News