அதிசயமே அசந்துபோகும் அதிசயங்கள் எவை..? நமக்கு மார்க்கெட்டிங் தெரியலைப்பா..!
எது அதிசயம் என்பதை இந்த உலகம் நமக்கு ஏழாக காட்டியுள்ளது. ஆனால் அவைகள் எல்லாம் உண்மையான அதிசயங்களா? படீங்க. தெரிஞ்சுக்கங்க.;
அதிசயம் என்றால் என்ன..?
அதிசயம் என்பது என்ன..? உருவாக்கப்பட்டுள்ள ஒன்றைப்போல வேறொன்றை உருவாக்கமுடியாது என்றால் அது அதிசயம். அல்லது வேறொன்றைப்போல இல்லாமல் புதுமையானதாக இருந்தால் அது அதிசயம் என்று சொல்லலாம். அப்படி எனில் ஒன்றைப்போல படைக்க முடியும் என்றால் அதை நாம் அதிசயம் என்று கூறலாமா?
இந்த செய்தியை முழுமையாக படித்துவிட்டு நீங்களே முடிவு செய்யுங்கள். தமிழகத்தில் நமது முன்னோர்கள் எத்தனை அதியசயங்களை படைத்துவிட்டுச் சென்றுள்ளனர். ஆனால் வரலாற்றில் அவைகள் பேசப்படாமல் போய்விட்டனவே..?
கீழே நாம் தந்துள்ள இந்த அதிசயங்களை பார்த்தால் உலகில் வேறு யாரும் செய்யமுடியாத, உருவாக்கமுடியாத அற்புத அதிசயங்கள். ஒருவேளை அதை நமக்கு சரியாக மார்க்கெட்டிங் செய்யத் தெரியவில்லையோ..? அட ஆமாங்க..நல்ல தயாரிப்புக்கு விளம்பரம் தேவையில்லை அல்லவா..?
அதைப்போல நமது முன்னோர் செய்த அதிசயங்களை நாம் உலகம் முழுமைக்கும் கொண்டுசெல்லாமல் விட்டுவிட்டோம். அதனால் வந்தவிளைவுகளே அதிசயமில்லாதவைகள் எல்லாம் உலக அதிசயங்கள் ஆகிவிட்டன.
சரி வாங்க...இப்போ நாம் நம்ம மேட்டருக்கு வருவோம்.
முதல்ல தாஜ்மஹாலுக்கு போவோம். தாஜ்மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்? தாஜ்மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா? என்ற கேள்வி நமக்குள் எழலாம்.
அதற்கான பதில் ஏன் இல்லை..? நிறையவே இருக்கிறது. அப்படியென்றால் மீண்டும் அதிசயம் என்ற பொருளுக்கு வருவோம். உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்றை உருவாக்கிய பின்னர் மீண்டும் அதைப்போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம். ஆனால் பாருங்கள் தாஜ்மஹால் போன்ற கட்டிடத்தை இன்று பல கொடிகள் செலவழித்து உருவாக்கிவிட முடியும்.
ஆனால், நம்ம திருநெல்வேலியில் இருக்கற நெல்லையப்பர் கோயிலில் ஒரு கல் தூணை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு ஸ்வரங்கள் ஒலிக்கும். இப்படி கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம் இல்லையா..? அதை மீண்டும் யாராவது உருவாக்க முடியுமா..? சிந்தித்துப்பாருங்கள்.
அதேபோல திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோயிலில் குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது ஒவ்வொரு மாதத்தின் வளர்ச்சிநிலையை சிற்பமாக வடித்து இருக்கிறார்கள்.
இன்னிக்கு ஸ்கேன் எடுத்து தெரிந்துகொண்ட அந்த வளர்ச்சிநிலையை தொழில்நுட்பம் வளராத பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஒரு குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இந்த நிலையில் (Positions) இருக்கும் என்பதை கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் எம் முன்னோர்கள். அது உலக அதிசயம் இல்லையா..?
அன்னியர் படை எடுப்பின்போது கூட. இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை. இன்றும் நிறைய கோயில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதியில், குறிப்பிட்ட நேரத்தில் மாலை போல் சிவலிங்கத்தின் மீது விழும். அப்படியென்றால் எவ்வளவு துல்லியமாக அளவீடு (Measure) செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று எண்ணிப் பாருங்கள். என்னே ஒரு பொறியியல் மூளை. அது அதிசயம் இல்லையா..?
சில கோயில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர்பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் விழுகிறது. இந்த கோயிலில் உள்ள சிவலிங்கம் எத்தனை ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள் பழமையானது. இது உலக அதிசயம் இல்லையா..?
அதேபோல மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் தஞ்சை பெரிய கோயில் போன்ற ஆலயங்களில் சிற்ப, மற்றும் கட்டிட வேலைப்பாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி நாம் சொல்லத்தொடங்கினால் நமக்கு இந்த இந்த ஒரு பிறவி போதாது. அவ்வளவு விஷயங்கள் உள்ளன.
ஓசோன் 20ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். ஆனால் 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம் இல்லையா..?
யாளி என்கிற ஒரு விலங்கின் சிலை பழங்கால கோயில்களில் நாம் பார்த்து இருப்போம். அது கிட்டத்தட்ட டைனோசர் போன்ற உருவத்தில் இருக்கும். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த விலங்கினம் என்பதை வலியுறுத்தவே அவ்வாறு ஒரு சிலையை வடித்து வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்.
அதேபோல சில பழங்கால கோயில்களில் உள்ள யாளி சிலையின் வாயில் கல்லினால் செதுக்கப்பட்ட ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டைக்கள்ளி நாம் உருட்டலாமே தவிர ஆயிரம் குங்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாளி வாயில் இருந்து உருண்டையை வெளியே எடுக்க முடியாது. அது உலக அதிசயம் இல்லையா..?
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர்கோயில், திருச்சி திருவானைக்கா, திருச்சி எறும்பீஸ்வரர், தஞ்சை பெரியகோயில், சிதம்பரம் நடராஜர் ஆலயம், திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலயம், மதுரை சுந்தரேஷ்வரர் ஆலயம், கங்கைகொணடசோழபுரம் ஆலயம் போன்ற கோயில்கள் அதன் கட்டுமானம், செதுக்கப்பட்டுள்ள சிலைகள் போன்றவை உலக அதிசயங்கள். யாரும் கற்பனை செய்துவிடமுடியாத, மீண்டும் உருவாக்கிவிட முடியாத அற்புதங்கள். நாம் சிவனின் வியாபகத்துள் உள்ளோம் என்பதற்கான கோயில்கள் அவை.
தஞ்சை பெரியகோயிலின் நிழல் தரையில் வீழ்வதில்லை. அதன் கட்டுமான பணிகள் அப்படி.இன்றைய பொறியாளர்கள் அதன் விந்தையை எண்ணி வாய்பிளந்து நிற்கிறார்கள்.
இன்று தாஜ் மஹாலைப்போல மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால் அதைப்போன்ற ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை எந்த வல்லரசும் செய்துவிட முடியாது.
யாளியின் வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் எடுக்க முடியாது. ஏனெனில் அது உள்ளே நுழைத்தது அல்ல. சிலையை உருவாகும்போதே அதை உள்ளே வைத்தே செதுக்கப்பட்டது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்துவிட முடியாது. மிகப்பெரிய பிரம்மாண்ட கற் கோயில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது என்பதை எந்த உலக வல்லரசும் செய்துவிட முடியாது. செய்யவே முடியாதது.
இப்ப புரியுதா..? அப்படின்னா..எது அதிசயம்? உங்களுக்கே தெரிந்து இருக்கும்.
குறிப்பு :
உண்மையான உற்பத்திப்பொருளுக்கு விளம்பரங்கள் தேவை இல்லை. ஒரு பொருள் வேறு ஒன்றாக உருவாக்கப்படும்போது அதற்கு விளம்பரங்கள் தேவைப்படுகின்றன. அதாவது மார்க்கெட்டிங் இருந்தால் மட்டுமே விற்பனையாகும்.
உதாரணமாக விளையும் உருளைக்கிழங்கு நேரடியாக விற்பனைக்கு வரும்போது, 'ஐயா, சந்தைக்கு உருளைக்கிழங்கு விற்பனைக்கு வந்துடிச்சி'என்று யாராவது விளம்பரம் செய்கிறார்களா..? இல்லை. ஆனால், அது பாக்கெட்டில் விற்பனையும் சிப்ஸாக வரும்போது அதற்கு விளம்பரம் தேவைப்படுகிறது. இன்று சர்வ சாதாரணமாக அந்த பிராண்டின் பெயரைச் சொல்லியே சிப்ஸ் கேட்கிறார்கள், சிறு வயதினர் கூட.
உருளைக்கிழங்கில் அந்த பாதிப்பும் இல்லை. அனால் அது சிப்ஸாக தயாரிக்கப்படும்போது அதில் பல ஆரோக்ய பிரச்னைகள் உள்ளன. ஆனால் மார்க்கெட்டிங் உத்திகளால் அவைகள் பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை.
நம்ம முன்னோர்கள் உருவாக்கிய விந்தையான,வியப்பான, ஆச்சர்யங்கள் நிறைந்த அற்புத படைப்புகள் எல்லாம் இப்படித்தான் அறியப்படாமல் அதிசய லிஸ்டில் மறைக்கப்பட்டுவிட்டன.
நம் முன்னோர்கள் படைத்த இந்த அதிசயங்கள், அதிசயங்களின் பட்டியலில் இல்லாமல் போனாலும் யாராலும் படைக்கமுடியாத யாராலும் மறுத்துவிடமுடியாத அதிசயங்கள்..!