ராஷ்மிகா மந்தனா டாட்டூன்னா சும்மாவா..? நீங்களுந்தான் பாருங்களேன்..!

Rashmika Mandanna Tattoo-ரசிகர்களின் இதயத்தில் டாட்டூவாக பதிந்துபோன ராஷ்மிகா மந்தனாவின் டாட்டூ ரகசியம்.;

Update: 2022-12-20 08:34 GMT

rashmika mandanna tattoo-நடிகை ராஷ்மிகா மந்தனா

Rashmika Mandanna Tattoo-தற்போது பல படங்களில் பணிபுரிந்து வரும் நடிகை ராஷ்மிகா மந்தனா, நேற்று தனது சமூக ஊடகத்தின் மூலம் நேரலைக்கு வந்தார். ரசிகர்களில் ஒரு பிரிவினர் ராஷ்மிகா மந்தனாவை பாராட்டிய நிலையில், மற்றொரு பகுதி பார்வையாளர்கள் அவரது தனிப்பட்ட மற்றும் தொழில், வாழ்க்கை தொடர்பான சில கேள்விகளைக் கேட்டனர். அதே நேரத்தில், ஒரு ரசிகர் அவரிடம் அவரது கையில் உள்ள டாட்டூவின் அர்த்தத்தை விளக்குமாறு கேட்டார். அதில் அவர் 2018ம் ஆண்டில் போடப்பட்டது.அதன் பொருள் "ஈடுசெய்ய முடியாதது" என்று விளக்கமளித்தார்.


சுவாரஸ்யமாக, 'போகரு' நடிகை மேலும் கூறும்போது , "நான் ஈடுசெய்ய முடியாதவள், அதேபோல நீங்களும் ஈடுசெய்ய முடியாதவர்கள். நாம் அனைவரும் அவரவர் சொந்த வழிகளில் தனித்துவமானவர்கள். உங்கள் வாழ்க்கையில் யாரும் உங்களை வேறொரு நபராக மாற்ற முடியாது. இதுதான் இந்த டாட்டூவின் அர்த்தம்". என்று கூறியபடியே அதை ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

rashmika mandanna tattoo


நேஷனல் க்ரஷ் 

நடிகை ராஷ்மிகா மந்தனா 'நேஷனல் க்ரஷ்' என்று இளைஞர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ராஷ்மிகா நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் வாரிசு படத்தில் ராஷ்மிகா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பல பேட்டிகளில் ராஷ்மிகா விஜய்யுடன் நடிக்க மிகவும் ஆசைப்படுகிறேன் என்று கூறியிருந்தார். அந்த ஆசை தற்போது நிஜமாகியுள்ளது. வாரிசு ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய்யுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ராஷ்மிகா சமீபத்தில் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.


rashmika mandanna tattoo

தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான சீதா ராமம் படத்திலும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான 'குட் பை' படத்திலும் ராஷ்மிகா நடித்திருந்தார்.


ராஷ்மிகா தனது கையில் டாட்டூவாக போட்டிருந்த வார்த்தை 'Irreplaceable' என்பதாகும். இதன் அர்த்தம் 'மாற்ற முடியாதது' அல்லது 'ஈடுசெய்ய முடியாதது' என்பதாகும். தென்னிந்திய சினிமாவில் இவ்வளவு குறைந்த காலத்தில் புகழ்பெற்று பாலிவுட் சினிமாவிலும் நடித்த ஒரே நடிகை ராஷ்மிகா தான் என்கிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

புஷ்பா படத்திற்கு பின்னர் அவரது புகழ் கூடுவதால் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ராஷ்மிகாவின் தொடக்க காலம்

ராஷ்மிகா மந்தனா 1996ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி பிறந்தார். ஒரு சில இந்தி மற்றும் தமிழ் திரைப்படங்கள் தவிர தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் முக்கிய நடிகையாக வலம் வருகிறார். அவர் நான்கு முறை SIIMA விருதுகள் மற்றும் ஒரு முறை பிலிம்பேர் விருது பெற்றுள்ளார். அவர் கிரிக் பார்ட்டி (2016) என்ற கன்னடத் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். மேலும் தெலுங்குத் திரைப்படமான சாலோ (2018), தமிழ்த் திரைப்படமான சுல்தான் (2021) மற்றும் இந்தி திரைப்படமான குட்பை (2022) ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.

அஞ்சனி புத்ரா (2017), கீதா கோவிந்தம் (2018), யஜமானா (2019), சரிலேரு நீகேவரு (2020), பீஷ்மா (2020), போகரு (2021), புஷ்பா: தி ரைஸ் (2021), மற்றும் சீதா ராமம் ஆகியவை வணிக ரீதியாக ராஷ்மிகாவை உயரத்திற்கு கொண்டுசென்றது. இவைகள் எல்லாம் வெற்றிகரமான படங்களாக அமைந்தன.


படிப்பு 

கர்நாடக மாநிலம், குடகில் உள்ள கூர்க் பப்ளிக் பள்ளியில் தனது ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடித்தார். பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரியில் உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர் இதழியல் மற்றும் ஆங்கில இலக்கியம் பயின்றார்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News