Year End 2024 : ரீரிலீஸ்லயும் வெறித்தனம் காட்டிய திரைப்படங்கள்..!
Year End 2024 : ரீரிலீஸ்லயும் வெறித்தனம் காட்டிய திரைப்படங்கள்..!
90ஸ் கிட்ஸ்களை குஷிப்படுத்தும் விதமாக இந்த ஆண்டில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ஸ்டார் நடிகர்களின் ஹிட் படங்கள் என்னென்ன? ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதில் யாருடைய படம் அதிகம் வசூல் செய்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உள்ளடக்கம்:
அஜித்தின் மங்காத்தா
அஜித்தின் 50வது படமாக வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'மங்காத்தா'. கடந்த மே மாதம் 1ம் தேதி இவரின் பிறந்தநாளன்று குறிப்பட்ட சில தியேட்டர்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் மொத்தமாக 14 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.
அஜித்தின் பில்லா
கடந்த மே 1ம் அஜித்தின் பில்லா திரைப்படம் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 150 ஸ்க்ரீன்களில் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் மொத்தம் 25 லட்சம் வசூல் செய்தது.
அஜித்தின் தீனா
மங்காத்தா, பில்லா படத்தை தொடர்ந்து கடந்த மே மாதம் 1ம் தேதி நடிகர் அஜித்தின் 'தீனா' திரைப்படம் தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. குறிப்பட்ட சில தியேட்டர்களில் மட்டும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் மொத்தம் 50 லட்சம் ரூபாய் வசூல் செய்தது.
தனுஷின் 3
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு வெளியான ரொமான்டிக் சைக்கலாஜிக்கல் திரைப்படம் '3'. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் கடந்த செப்டம்பர் 14ம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டது. ரீ ரிலீஸ் செய்யப்பட்ட 3 படத்துக்கு தனுஷ் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுக்க இப்படம் 1.50 கோடி ரூபாய் வசூல் செய்தது.
விஜயின் கில்லி
விஜய், த்ரிஷா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் கில்லி. இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு அதிகமான ரசிகர்கள் கூட்டத்தை ஈர்த்தது. எதிர்பார்த்தை விட இப்படம் 25 நாட்களில் மொத்தம் 35 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியது.
ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட படங்கள் வசூல் விபரம்:
படம் | வசூல் (ரூபாய்) |
---|---|
மங்காத்தா | 14 லட்சம் |
பில்லா | 25 லட்சம் |
தீனா | 50 லட்சம் |
3 | 1.50 கோடி |
கில்லி | 35 கோடி |