மதுரை முத்து ஏன் 2வது கல்யாணம் பண்ணிக்கிட்டார் தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
Madurai Muthu Second Wife-மதுரை முத்துவின் முதல் மனைவி இறந்த 6 மாதங்களில் அவர் 2வது திருமணம் செய்துகொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.;
Madurai Muthu Second Wife-மதுரை முத்து ஒரு நகைச்சுவை நடிகர் ஆவார். இவர் முக்கியமாக தமிழ் தொலைக்காட்சித் துறையில் பணியாற்றி வருகிறார். அவர் 1979ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி மதுரை, திருமங்கலத்தில் பிறந்தார். வணிகவியல் இளங்கலை (பி. காம்) மற்றும் முதுகலை வணிகவியல் (எம். காம்) பட்டம் பெற்றார். இவரது மனைவி பெயர் வையம்மாள், தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். 2016ம் ஆண்டு பிப்ரவரி 5ம் தேதி, பிள்ளையார்பட்டி கோவிலில் இருந்து வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அவரது மனைவி வையம்மாள் கார் விபத்தில் உயிரிழந்தார்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, முத்து தனது இரண்டு மகள்களுக்காக ஆறு மாதங்களுக்குப் பிறகு மறுமணம் செய்து கொண்டார். அவர் பல் மருத்துவரான நீதியை (அவரது நண்பர்) மணந்தார். தமிழ்நாட்டிலேயே முதன் முதலில் ஸ்டாண்ட்-அப் காமெடியை தொலைக்காட்சியில் கொண்டு வந்தவர் முத்து. அவர் ஒரு பிரபலமான நகைச்சுவை நடிகர் மற்றும் சுமார் 80 நாடுகளில் 1200+ மேடை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
மதுரை முத்து சன் தொலைகாட்சி 'கலக்கப்போவது யாரு'நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலம் அடைந்தவர். பின்னர் சன் தொலைகாட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளுக்கு நடுவராக இருந்து பணியாற்றினார். மேலும் மதுரை முத்து 'குற்றம் குற்றமே' (2022), 'சபாபதி' (2021) மற்றும் 'குக்கு வித் கோமாளி' (2019) ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பெயர் பெற்றவர்.
மதுரை முத்து அவரது மனைவியின் மரணத்திற்குப் பிறகு, அவர் சமூக வலைத்தளங்களில் நிறைய சோகமான இடுகைகளைப் பதிவேற்றினார். அவரோடு வாழ்ந்த காலங்களின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ஆனால், அவர் இறந்த சில மாதங்களிலேயே வேறு ஒரு பெண்ணை மறுமணம் செய்து கொண்டார். அவரது நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்கும் பார்வையாளர்கள் பலரையும் இந்த செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், அந்த செய்தியை மறுத்த நடிகர் முத்து , இது ஒரு குறும்படத்துக்காக என்று கூறி மறுத்து வந்தார். பின்னர் அவர் தனது இரண்டாவது மனைவிதான் என்பதை ஒப்புக்கொண்டார். இதுபற்றி முத்துவிடம் கேட்டபோது, அவர் மனைவி மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளார் என்பது அவரது நண்பர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார். எனது மனைவி இறந்த பிறகு, நான் மிகவும் கஷ்டப்பட்டேன். என்னால் தனிமையில் வாழ முடியும். ஆனால், எனது குழந்தைகளால் அப்படி வாழ முடியாது. அதனால்தான் என் குழந்தைகளுக்கு ஒரு தாய் வேண்டும் என்பதால்தான் மறுமணம் செய்து கொண்டேன் என்றார் முத்து.
மதுரை முத்து முதல் மனைவி யார்?
வையம்மாள் என்ற லேகா மதுரை முத்துவின் முதல் மனைவி ஆவார். அவர் தொழில் ரீதியாக மருத்துவர் ஆவார். அவர் கார் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2