கவுண்டமணியின் ரகசியம் உடைத்த நடிகை சுகன்யா

நடிகர் கவுண்டமணி சினிமால பாக்குற மாதிரி எல்லாம் நிஜத்தில் கிடையாது.. ரகசியத்தை உடைத்த நடிகை சுகன்யா;

Update: 2024-03-01 03:54 GMT

1990களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை சுகன்யா பல வருடங்கள் கழித்து மீண்டும் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் கவுண்டமணி பற்றி வெளிப்படையாக பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். நடிகை சுகன்யா கவுண்டமணியோடு பல படங்களில் நடித்திருந்தாலும் இப்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடிகர் கவுண்டமணி சமீபத்தில் எந்த திரைப்படங்களிலும் நடிக்காமல் இருக்கும் நிலையில் அவரைப் பற்றிய செய்திகளை சுகன்யா சொன்னதை கேட்டு இவருக்கு காமெடி மட்டும் தான் தெரியும் என்று நினைத்திருந்த ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருக்கும். என்ன நடந்தது என்பது விரிவாக பார்க்கலாம்.

வெள்ளி திரையில் சுகன்யா என்ற பெயர் 1990ஸ் கிட்ஸ்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. அந்த நேரத்தில் முன்னணி நடிகர்கள் பலரோடும் சினிமாவில் நடித்து பிரபலமடைந்திருந்த சுகன்யா சீரியல்களையும் விட்டு வைக்கவில்லை. சின்ன திரையில் ஆனந்தம் சீரியல் சுகன்யாவிற்கு பெரிய அளவில் பிரபலத்தை கொடுத்தது.

வெள்ளி திரையில் சத்யராஜ், பிரபு, கமல்ஹாசன் என்று முக்கியமான பல நடிகர்களோடு ஜோடியாக சுகன்யா நடித்திருந்தார். இவருடைய ஹோம்லியான கெட்டப் அதிகமான ரசிகர்களை கவர்ந்தது. மார்டன் உடைகளிலும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். அவருடைய சொந்த பெயர் ஆர்த்தி தேவி தானாம். பாரதிராஜாவால் தான் புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் இருந்து சுகன்யா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார். பாரதிராஜா தன்னுடைய இயக்கத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு புது பெயரை வைத்து பிரபலமாக்கி விடுவது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அந்த மாதிரி தான் ஆர்த்தி தேவி சுகன்யாவாக இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் புகழின் உச்சத்தில் வலம் வந்து கொண்டிருந்த நடிகை சுகன்யா பிறகு திடீரென்று சினிமாவில் இருந்து விலகி இருந்தார்.

இந்த நிலையில் பல வருடங்கள் கழித்து இப்போது மீண்டும் பொதிகையில் சக்தி ஐபிஎஸ் என்ற சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார். ஏற்கனவே இவர் நடித்த ஆனந்தம் சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் பலருக்கும் ஃபேவரைட். அதுவும் 1990ஸ் கிட்ஸ்களுக்கு சொல்லவே வேண்டாம். இந்த நிலையில் இவர் மீண்டும் சீரியலுக்கு வருகிறார் என்றதும் ரசிகர்கள் இவர் சன் டிவி, விஜய் டிவி போன்ற சேனல்களில் வருவார் என்று நினைத்திருந்த நிலையில் பொதிகை சேனலில் சீரியலில் நடிப்பது ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்திருந்தாலும் இவருக்காகவே இந்த சீரியலை பார்ப்பவர்கள் ஏராளம் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் தான் சுகன்யா சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகர் கவுண்டமணி பற்றி பேசி இருக்கிறார். அதில் நீங்க சினிமாவில் பார்க்கிற மாதிரி கவுண்டமணி சார் கிடையாது. சினிமாவில் அவர் காமெடியாக பேசிக் கொண்டிருந்தாலும் நிஜத்தில் அவருக்கு சினிமாவை பற்றி அவ்வளவு அறிவு இருக்கிறது. நிறைய ஆங்கில படங்களை பார்ப்பார். ஆங்கில நடிகைகள் குறித்து பேசுவார்.

அதுபோல என்னையும் சில படங்களை பார்க்கும் படி அறிவுரை கூறியிருக்கிறார். நான் சினிமாவில் அறிமுகமான சமயத்தில் என்கிட்ட வாமா வாமா என்று நல்லா பழகுவாரு. என்னிடம் மட்டுமல்ல அவரோடு நடிப்பவர்களிடம் எல்லோரிடமே அவர் அப்படித்தான் நடந்து கொள்வார். நடிப்பை தாண்டியும் கவுண்டமணிக்கு நிறைய திறமை இருக்கிறது. சூட்டிங் ஸ்பாட்டில் எல்லோரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பார்.

அவரோடு சேர்ந்து நடிக்க எனக்கு ரொம்பவே பிடிக்கும். இப்போது அவர் அதிகமாக திரைப்படங்களில் நடிக்கவில்லை. ஆனாலும் அவர் நடித்த காட்சிகள் இப்போது உள்ள இளைஞர்கள் வரைக்கும் அதிகமாக பிடித்திருக்கிறது என்று அந்த பேட்டியில் சுகன்யா பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News