கனடாவின் இந்திய தூதருக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

கனடாவின் இந்திய தூதருக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

குர்பத்வர்த் சிங் பன்னூன்

கனடாவின் இந்திய தூதருக்கு காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு மிரட்டல்

கனடா நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் அமைப்பு ஆகிய அனைத்துமே வெளிநாட்டினர் கையில் தான் உள்ளது. கனடா நாட்டில் இந்தியர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். அவர்களில் பெரும்பான்மையினர் சீக்கியர்கள். அவர்களுக்கு அடுத்த படியாக தமிழர்களும் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இந்தியாவில் இருந்து உயர் படிப்பு படிப்பதற்காக செல்பவர்களில் பெரும்பாலானவர்கள் நல்ல வருவாய் கிடைப்பதன் காரணமாக அங்கேயே செட்டில் ஆகி விடுகிறார்கள். இதற்கு காரணம் ஆள் பற்றாக்குறை காரணமாக அந்நாட்டு அரசாங்கம் இந்தியர்களுக்கு எளிதாக குடியுரிமை வழங்குவது தான்.

கனடாவில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக இருப்பதற்கு காரணம் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலையை தொடர்ந்து சீக்கியர்களுக்கு எதிராக கடந்த கலவரமும் ஒரு காரணம். அப்போது உயிருக்கு பயந்து அங்கு போய் குடியேறிய சீக்கியர்கள் தற்போது அந்நாட்டு அரசியலில் முக்கிய இடத்தை பிடித்து விட்டார்கள். சீக்கியர் கட்சிக்கு சுமார் 10 எம்.பி.க்கள் இருப்பதால் அவர்கள் அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டினையே மிரட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் பயங்கார வாத அமைப்பின் தளபதிபோல் கனடாவில் இருந்து கொண்டு இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு வந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரது சாவிற்கு இந்தியா உளவு அமைப்பு தான் காரணம் என கனடா பிரதமர் குற்றம் சாட்டினார். இதற்கு இந்தியா உரிய விளக்கத்தை அளித்த பின்னர் அந்த குற்றச்சாட்டு அப்படியே அமுங்கி போனது.

ஆனாலும் கனடாவில் உள்ள சீக்கிய அமைப்புகள் தொடர்ந்து இந்தியாவிற்கு எதிராக விஷம பிரச்சாரம் செய்து கொண்டு தான் உள்ளன. சமீபத்தில் காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பான சீக்கியவர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் பன்னூன் சமீபத்தில் வெளியிட்டவீடியோவில், ஏர்-இந்தியா விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தார்.

இந்த நிலையில் குர்பத்வர்த் சிங் பன்னூன் மீண்டும் ஒரு மிரட்டல் விடுத்துள்ளார். அதில், ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணையில்இருந்து கவனத்தை திசை திருப்புவதற்காக, ஏர்-இந்தியாவை புறக்கணிப்பதை பயங்கரவாத அச்சுறுத்தலுடன் தொடர்புப் படுத்தி கனடாவுக்கானஇந்திய தூதர் சஞ்சய் வர்மா பொய் பிரசாரம் செய்கிறார். எனவே அவரை கைது செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர்கள் வெகுமதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.

அவரது இந்த மிரட்டல் கனடா -இந்தியா உறவில் மீண்டும் சிக்கலை ஏற்படுத்துவது போல் உள்ளது.

Tags

Next Story