ராஜஸ்தானில் பொதுமக்களை கடித்து குதறிய கழுதை

ராஜஸ்தானில் பொதுமக்களை கடித்து குதறிய கழுதை
X
சோஜாட் பகுதியின் குடகாலனில் மூன்று மணி நேரம் அட்டகாசம செய்த கழுதையை பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்தி அதன் வாயைக் கயிற்றால் கட்டினர்.

குடகாலன் கிராமத்தில் காலையில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவரின் காலை கழுதை கடித்துள்ளது. அந்த பெண் அலறிய போதும் கழுதை காலை விடுவிக்கவில்லை. மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து கழுதையின் பிடியில் இருந்து அவரை மீட்டனர். பெண்ணின் காலில் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து, அதே கழுதை சாலையில் நடந்து சென்ற சிறுமியை கட்டிப்பிடித்து ஓடத் தொடங்கியது. இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் கழுதையின் பின்னால் ஓடினார்கள். சாலைகளில் மக்கள் தடிகளால் கழுதையை சுற்றி வளைக்க முயன்றனர். இந்த நேரத்தில் கழுதை ஓடிக்கொண்டே இருந்தது. மக்கள் கழுதையை கட்டையால் அடித்து சிறுமியை விடுவித்தனர்.

சுமார் மூன்று மணி நேர போராட்டத்திற்கு பிறகு கழுதையின் உரிமையாளரும், உடன் வந்தவர்களும் கழுதையைக் கயிற்றால் கட்டினர். கழுதையின் உரிமையாளர் அதன் வாயைக் கயிற்றால் கட்டினார். கழுதை கட்டப்பட்டதை அடுத்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். காயமடைந்த மூவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

Tags

Next Story
ai as the future