சினிமா 360 டிகிரி...! அத்தனை அப்டேட்டுகளும் ஒரே இடத்தில்....!

சினிமா 360 டிகிரி...! அத்தனை அப்டேட்டுகளும் ஒரே இடத்தில்....!
X
சினிமா 360 டிகிரி...! அத்தனை அப்டேட்டுகளும் ஒரே இடத்தில்....!

விஜய் 69

நவம்பரிலிருந்து ஷூட்டிங் நடத்தக்கூடாது என கவுன்சில் போட்ட உத்தரவு, தளபதி 69 படத்துக்கு மட்டும் பொருந்தாது என தகவல். படம் டிசம்பர் வரை ஷூட்டிங் நடப்பதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனின் புறநானூறு

சுதாகொங்கரா, சிவகார்த்திகேயன் இணையும் புதிய படத்தின் ஷூட்டிங்கும் நவம்பர் முதல் தொடங்கி நடைபெறுவதாக தகவல்.

இட்லி கடை

தேனியில் நடைபெற்று வந்த முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு. அடுத்ததாக பாடல் காட்சி ஒன்றை படமாக்க தனுஷ் திட்டமிடுகிறாராம். இதற்கிடையில் தெலுங்கு, ஹிந்தி படங்களையும் முடித்துவிட்டு, இளையராஜா பயோபிக் படத்துக்கு வருகிறார். ஜனவரி அல்லது பிப்ரவரியில் படம் தொடங்கும்.

தடுமாறும் படம்

ஈட்டி இயக்குநர் ரவியரசு, இயக்கத்தில் கன்னட திரைப்படம் தடுமாறுகிறது. இப்போதைக்கு இல்லை என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாம்.

லப்பர் பந்து இயக்குநருக்கு கிராக்கி

லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து அடுத்த படத்தை தங்களுக்கு பண்ண வேண்டும் என பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்கிறார்கள். அடுத்த படத்தில் 1 கோடி ரூபாய் சம்பளமாம். 3 கோடி ரூபாய் சம்பளம் தரவும் அடுத்தடுத்த நிறுவனங்கள் தயாராக இருக்கும் நிலையில், டான் பிக்சர்ஸ் நிறுவனமே 3 கோடி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளதாம்.

ஜெயம் ரவி லைன் அப்

டிமான்டி காலனி 2 திரைப்படத்தை தயாரித்துள்ள நிறுவனத்தில் அடுத்தடுத்து 2 படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் ஜெயம் ரவி. ஷங்கரின் உதவி இயக்குநர் மற்றும் பாக்கியராஜ் கண்ணன் ஆகியோரின படத்தில் நடிக்க இருக்கிறாராம்.

கூலி செம்ம ஆஃபர்

கூலி டிஜிட்டல் ரைட்ஸ் வாங்க நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் நிறுவனங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் சென்னையிலேயே தங்கி வியாபாரம் பேசுகிறார்களாம். 175 கோடி வரை வந்து நிற்கிறார்களாம். நெட்பிளிக்ஸ் தரப்பு இரண்டு படங்களுக்கும் சேர்த்து 350 கோடி தர முன்வந்துள்ளதாம். சன்பிக்சர்ஸ் தரப்பில் இரண்டு படங்களுக்கும் சேர்த்து 400 கோடி தரவேண்டும் என சன்பிக்சர்ஸ் சொல்கிறதாம்.

வேட்டையன் ரிலீஸ்

தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வரும் வேட்டையன் திரைப்படம் நாளை அக்டோபர் 10ம் தேதி வெளியாக இருக்கிறது. புக்கிங் தொடங்கி நடைபெற்று வருகிறது.

வேட்டையன் பார்க்க விடுமுறை

ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தைக் காண நாளை விடுமுறை வழங்கி ஊழியர்களை உற்சாகப்படுத்தியுள்ளது HYSAS எனும் நிறுவனம். தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த நிறுவனம் டிக்கெட்டையும் வழங்கியுள்ளது.

பிக்பாஸ் அப்டேட்

இன்றைய தினம் நடைபெற்ற பிக்பாஸ் வீட்டு டாஸ்கின்போது ரஞ்சித், ரவீந்தர் ஆகியோருக்கு இடையே சண்டை மூண்டுள்ளது. இருவரது வாக்குவாதத்தில் அனல் பறக்க அடுத்து ரஞ்சித், ரவீந்தரை அடிக்கப் பாய்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடிடியில் வாழை

இந்த வாரம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ஒளிபரப்பாக இருக்கிறது. அக்டோபர் 11ம் தேதி முதல் கண்டுகளிக்கலாம்.

தீபாவளிக்கு ரிலீஸு

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வுகள் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் தீபாவளி திருநாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வந்துள்ளது. இருவருக்கும் குழந்தை பிறந்து அவர்கள் நடக்கவே ஆரம்பித்துவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதிக்கு நிபந்தனை

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வரும் விஜய் சேதுபதி பிக்பாஸ் சீசன் 8 முடியும் வரை வேறு எந்த திரைப்படங்களுக்கும் தனது சமூக வலைத்தளங்களில் புரமோசன் செய்யக்கூடாது என பிக்பாஸ் தரப்பு நிபந்தனை விதித்துள்ளதாம்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து