முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா காலமானார்

முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் சங்கரய்யா  காலமானார்
X

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் என் சங்கரய்யா 

சங்கரய்யா இன்று காலை 9.30 மணியளவில் காலமானார். சங்கரய்யாவின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரபோராட்ட தியாகியுமான சங்கரய்யா (வயது 102). , உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா காலமானார்.

உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக உயிரிழந்த சங்கரய்யாவின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக குரோம்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட உள்ளது.

3 முறை எம்.எல்.ஏ.வாக பணியாற்றியுள்ள தியாகி சங்கரய்யாவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கி தமிழகஅரசு கௌரவித்துள்ளது. தியாகி சங்கரய்யாவின் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான என். சங்கரய்யா, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்ட மாணவர் தலைவர்களில் ஒருவர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் 1921ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தவர் சங்கரய்யா. பிறகு இவரது குடும்பம் மதுரைக்குக் குடிபெயர்ந்தது. மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெறச் சேர்ந்தார்.

இடதுசாரிக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட அவர், 17 வயதிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். 1941இல் இறுதித் தேர்வு நெருங்கிய போது அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், பிரிட்டிஷாருக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்டதால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, சங்கரய்யா உள்ளிட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சங்கரய்யாவும் கைது செய்யப்பட்டார். தனது பி.ஏ. தேர்வை எழுத முடியவில்லை. அதோடு அவருடைய படிப்பு முடிவுக்கு வந்தது. 1942இல் பல மாணவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், சங்கரய்யா மட்டும் விடுவிக்கப்படவில்லை. தேசத்துரோகம், கம்யூனிஸ்ட் கட்சி ஈடுபாடு போன்றவற்றைக் காரணம் காட்டி அவருடைய தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுக்கொண்டே வந்தது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்புக்காக பலமுறை சிறை சென்றுள்ளார் சங்கரய்யா. மதுரை மேற்குத் தொகுதியிலிருந்து மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்.

கடந்த 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு நிறுவிய தகை சால் தமிழர் விருது முதல் முறையாக என். சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டது.

Tags

Next Story