வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாட்டுப் பணிகள்; கலெக்டர் ஆய்வு

வாக்கு எண்ணும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.
நாடு முழுவதும் பாராளுமன்ற பொது தேர்தல், 2024 இல் நடைபெற உள்ளது. அதற்கான முன்னேற்பாடு பணிகள் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி துவங்கியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடம் வளாகம் மற்றும் சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்கு என்னும் மையத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், ஜோலாா்பேட்டை, திருப்பத்தூா், செங்கம், கலசப்பாக்கம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்படுகிறது.
இதேபோல, போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி, செஞ்சி, மயிலம் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய ஆரணி மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்படுகிறது.
இவ்விரு வாக்கு எண்ணும் மையங்களிலும் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான முருகேஷ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
மேலும் இந்த ஆய்வின்போது வாக்கு எண்ணிக்கை மையங்களில் தேவையான பாதுகாப்பு வசதிகள் , போக்குவரத்து வசதிகள், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட அனைத்து அம்சங்கள் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி , மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் குமரன் , திருவண்ணாமலை வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu