திருவண்ணாமலையில் நடனமாடி கிரிவலம் வந்த பக்தர்கள்

திருவண்ணாமலையில் நடனமாடி கிரிவலம் வந்த பக்தர்கள்
X

திருவண்ணாமலையில் நடனமாடி கிரிவலம் வந்த பக்தர்கள்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கிரிவலத்தில் பெண் பக்தர்கள் ஜால்ரா மற்றும் கோலாட்டத்துடன் நடனமாடி பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அடிக்கு 1008 லிங்கம் உள்ள கிரிவலத்தின் மகிமையை உணர்த்தும் நோக்கில் சிவனின் தெலுங்கு பக்தி பாடல்களுக்கு பல்வேறு நடனங்கள் ஆடி கிரிவலம் மேற்கொண்ட ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடன குழுவினர். நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலம்.

இந்த கிரிவலப் பாதையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி திருக்கார்த்திகை தீபத் திருவிழா உள்ளிட்ட பல்வேறு விசேஷநாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் மேற்கொள்வர்.

கடந்த சில மாதங்களாகவே தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும், கிரிவலத்தின் மகிமையை உணர்த்தும் நோக்கிலும், மாணவர்கள் இளைஞர்கள் தீய பழக்கத்தில் இருந்து விடுபடவும் உள்ளிட்ட பல்வேறு கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கமாம்பா நடன குழுவை சேர்ந்த 22 பெண்கள் அடிக்கு 1008 லிங்கம் உள்ள திருவண்ணாமலை கிரிவலப் பாதையில், கிரிவலத்தின் மகிமையை உணர்த்தும் நோக்கிலும், சிவபெருமானின் மீது கொண்ட தீராத பக்தியாலும், சிவனின் தெலுங்கு பக்தி பாடல்களுக்கு பல்வேறு வகையில் கோலாட்டம், மேளம் கொண்டு நடனம் உள்ளிட்ட பல்வேறு நடனங்களை ஆடியபடி கிரிவலம் மேற்கொண்டனர்.

ராஜகோபுரம் அருகே தொடங்கப்பட்ட இந்த நடன கிரிவலம் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவல பாதை முழுக்க விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர். கடந்த 8 ஆண்டுகளாக ஆந்திர மாநிலத்தில் உள்ள பல்வேறு திருக்கோவில்களில் இக்குழுவினர் நடனம் ஆடி வருவதுடன் திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் பிரம்மோற்சவத்தின் போது இக்குழுவினர் நடனமாடி வலம் வருவது குறிப்பிடத்தக்கது.

இரவு முழுக்க நடனமாடிய இக்குழுவினரை கிரிவலம் வந்த ஆன்மீக பக்தர்கள் பாராட்டியதுடன் அனைவரது கவனத்தையும் இந்த நடனம் ஈர்த்தது.

Next Story