இனி இந்த துறையிலதான் வேலைவாய்ப்பு அதிகமாம்.. ஏன்..?
கடந்த ஆண்டை விட சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகள் 14 சதவீதம் அதிகரித்துள்ளன. இதில் பெங்களூரு முதலிடம் பெற்றுள்ளதாக அறிக்கை தெரிவிக்கின்றன.
உலகளாவிய வேலைவாயப்புக்கான அறிக்கையின்படி, தரவு பாதுகாப்பில் கவனம் செலுத்துவது கடந்த ஒரு வருடத்தில் இணைய பாதுகாப்பு நிபுணர்களுக்கான வேலைவாய்ப்புகள் சராசரியாக 14 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த அறிக்கையானது 2023ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2024ம் ஆண்டு செப்டம்பர் இடைப்பட்ட காலத்தில் வேலைவாய்ப்புகள் மற்றும் பதிவுகள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட தரவை அடிப்படையாகக் கொண்டது.
சைபர் செக்யூரிட்டி வேலைவாய்ப்புகளில் நாட்டிலேயே பெங்களூரு முதலிடத்தில் இருப்பதாகவும், கிட்டத்தட்ட 10 சதவீத பட்டியல்களில், டெல்லி 4 சதவீதமும், மும்பை 2 சதவீதமும், ஹைதராபாத் 2 சதவீதமும் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
இந்தியாவின் சிறந்த தொழில்நுட்ப மையமாக பெங்களூரு இருந்து வருகிறது. முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்ட்அப்கள் மற்றும் உலகளாவிய நிறுவனங்களின் தாயகம் எனவும் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
டிஜிட்டல் செயல்பாடுகள் விரிவடைவதால், நகரத்தில் உள்ள வணிகங்கள் சைபர் பாதுகாப்பில் தங்கள் கவனத்தை அதிகரிக்கின்றன. இது நிபுணர்களுக்கான தேவையை உருவாக்குகிறது.
இரண்டாவது இடத்தில் உள்ள டெல்லி , சைபர் செக்யூரிட்டி வேலை வாய்ப்புகளில் 4 சதவீதத்தை கொண்டுள்ளத. இது ஒரு பெரிய கார்ப்பரேட் மையமாக இருப்பதால், பல பன்னாட்டு நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களை உள்ளடக்கியதுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் வளர்ந்து வரும் சூழலில், தற்போது சைபர் செக்யூரிட்டி துறையின் தேவையும் அதிகரித்துக்கொண்டே உள்ளது. இதனால் எதிர்காலத்தில் இந்தத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் கிடைக்கக்கூடியதாக மாறியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu