கலசப்பாக்கத்தில் மன்னார் சாமி திருக்கோவில் திருப்பணிகள் தொடக்கம்

கலசப்பாக்கத்தில் மன்னார் சாமி திருக்கோவில் திருப்பணிகள் தொடக்கம்

கோயில்களின் புனரமைப்பு பணியை தொடக்கி வைத்த சரவணன் எம்எல்ஏ

கலசப்பாக்கத்தில் மன்னார் சாமி திருக்கோவில் திருப்பணிகளை, எம் எல் ஏ தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்தகாம்பட்டு கிராமத்தில் எழுந்தருளும் பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோயிலில் கோவில் திருப்பணிக்காக இந்து சமய அறநிலைத்துறை மூலம் ரூ 8 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதன் பணிகளை தொடங்குவதற்காக சரவணன் எம்எல்ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில் கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் பேசுகையில்,

இந்த கோவில் திருப்பணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களிடம் கலசபாக்கத்தில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு கோவில் திருப்பணி கோவில் குடமுழுக்கு போன்ற கோரிக்கைகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். அதேபோல் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அவர்களும் கலசப்பாக்கம் கோவில் திருப்பணிகள் செய்வதற்கு அமைச்சரும் பரிந்துரை செய்தார். அதனால் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, அவர்களும் கலசபாக்கம் தொகுதி வளர்ச்சியான தொகுதியாக மாற்றுவதற்காகவும் கோவில் திருப்பணிகளை உடனுக்குடன் செய்து கொடுப்பதற்காகவும் இந்த காம்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் சமேத மன்னார்சாமி திருக்கோவிலுக்கு ரூ 8 லட்சம் இந்து சமய அறநிலைத்துறை மூலம் நிதி ஒதுக்கீடு செய்து கோவில் திருப்பணிக்காக வழங்கப்பட்டுள்ளது.

அதனால் இந்த கோவில் திருப்பணிகள் அனைத்தும் சிறப்பான முறையில் நடைபெற வேண்டும். கோவிலுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும். கோவில் திருப்பணிக்கும் கோவில் அடிப்படை வசதிகளுக்கும் தேவை என்றால் என்னிடம் தாராளமாக கேளுங்கள் நான் செய்வதற்கு தயாராக உள்ளேன். மேலும் இந்த கோவில் திருப்பணி மூலம் கோவில் புனரமைத்தல் அமைத்து கோவில் பாலா ஆலயம் செய்து துவங்கி வைக்கப்படுகிறது.

விரைவில் இதன் பணிகளை முடித்து கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறும். மேலும் கலசபாக்கம் தொகுதியில் பல்வேறு கோவில்களுக்கு குடமுழுக்கு போன்ற கோவில் திருப்பணிகள் அனைத்தும் திராவிட மாடல் ஆட்சியில்தான் அதிகமான நடைபெற்று வருகிறது. இதை நீங்கள் சிந்தித்துப் பார்த்து மேலும் கோவிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் என்னிடம் தாராளமாக கேளுங்கள் நான் செய்து கொடுப்பதற்கு தயாராக உள்ளேன் என்று சரவணன் எம்எல்ஏ கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சிவகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வழக்கறிஞர் சுப்பிரமணியம், ஆய்வாளர் நடராஜன், அறங்காவலர் குழு தலைவர் ராமன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் கார்த்திகேயன், மற்றும் கோவில் உபயதாரர்கள் கோவில் நிர்வாகிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Next Story