பாறை உடைக்கும்போது வெடி வெடித்து தொழிலாளி உயிரிழந்தார்

பாறை உடைக்கும்போது வெடி வெடித்து தொழிலாளி உயிரிழந்தார்
X
செங்கம் அருகே மேல்வணக்கம்பாடி கிராமத்தில் பாறை உடைக்கும்போது வெடி வெடித்ததில் தொழிலாளி உயிரிழப்பு

செங்கம் அருகே உள்ள மேல்வணக்கம்பாடி கிராமத்தில் திருப்பதி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பாறைகளை வெடி வைத்து தகர்க்கும் பணி நடைபெற்றது. சுகன் (வயது 35) என்ற கூலித்தொழிலாளி பாறை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

எதிர்பாராதவிதமாக வெடி வெடித்ததில் சுகன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த மேல்செங்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி