/* */

நெல்லை மாநகராட்சியில் திமுக கூட்டணி 50 இடங்களை வென்றது

திருநெல்வேலி மாநகராட்சியில் திமுக கூட்டணி 50 இடங்களில் அமோக வெற்றி பெற்றது

HIGHLIGHTS

நெல்லை மாநகராட்சியில் திமுக கூட்டணி 50 இடங்களை வென்றது
X

நெல்லையில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது. மாநகராட்சியில் 50 இடங்களை கைப்பற்றி திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது

நெல்லை மாவட்டத்தில் 3 நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளுக்கு ஏற்கனவே சில மணி நேரங்களுக்கு முன்பு தேர்தல் முடிவுகள் முழுமையாக அறிவிக்கப்பட்டன. இதில் இரண்டு நகராட்சிகளும், 12 பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. ஒரு நகராட்சியில் சுயேட்சைகள் பெரும்பான்மை இடங்களை பிடித்துள்ளனர்.

ஒரு பேரூராட்சியை அதிமுக கைப்பற்றியது. நான்கு பேரூராட்சிகளில் திமுக குறைவான இடங்களை பிடித்திருப்பதால் அந்த பேரூராட்சிகளை கைப்பற்றுவது யார் தலைவர் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து நெல்லை மாநகராட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை மட்டும் நடைபெற்று வந்த நிலையில் மாநகராட்சி வாக்கு எண்ணிக்கையும் முழுமையாக முடிவு பெற்றுள்ளது. நெல்லை மாநகராட்சியில் மொத்தம் 55 வார்டுகளுக்கு தேர்தல் நடத்தப்பட்ட நிலையில் திமுக கூட்டணி 50 இடங்களக படித்து அமோக வெற்றி பெற்றுள்ளது. இதுதவிர அதிமுக நான்கு இடங்களிலும், சுயேட்சை ஒரு இடத்திலும் மாநகராட்சியில் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் நெல்லை மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. தொடர்ந்து மறைமுக தேர்தல் மூலம் மாநகராட்சி மேயர், துணை மேயர் மற்றும் நான்கு மண்டல குழு தலைவர்கள், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

Updated On: 22 Feb 2022 6:00 PM GMT

Related News