'இனி, இந்திய வான்வெளி நமது வசம்' - நவீன போர்முறை நுட்பத்தில் இந்தியா சாதனை
வான்வெளி பாதுகாப்பு போர் முறை தொழில்நுட்பத்தில், சாதனை நிகழ்த்திய இந்தியா (கோப்பு படம்)
Indian Airspace -மரபுசார்ந்த போர்முறைகள் முற்றிலும் மாறியுள்ள தற்போதய நிலையில், போர்முறைகளில் நவீன தொழில்நுட்பங்கள் புகுந்து விட்டன. ரஷ்யா நவீன போர்முறைக்கு ஏற்ற வகையில், தன்னை மாற்றிக் கொள்ளாததால் தான், மிகவும் பலவீனமான ராணுவத்தை கொண்ட உக்ரைனிடம் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. இதனை ஒட்டுமொத்த உலகமும் உணர்ந்துள்ளது.
இந்தியா இந்த விஷயத்தில் மிகவும் தெளிவாக உள்ளது. இந்திய தலைவர்கள் எதிர்கால போர் முறை எப்படி இருக்கும் என்பது குறித்து, தெளிவான திட்டம் வைத்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பே, குறுகிய கால போர் நடந்தால் வெற்றிக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும். நீண்ட கால போர் நடந்தால் (அதற்கு வாய்ப்பு குறைவு) என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்ற திட்டங்கள் இந்தியாவிடம் தெளிவாக உள்ளது.
தவிர எதிர்காலத்தில் மரபு சார்ந்த போர்களோ, தரைப்படை மோதலோ மிகவும் குறைவாகவே இருக்கும். வானிலும், விண்ணிலும் போர் நடக்கும். (உண்மைதான் வானுக்கும், விண்ணுக்கும் வித்தியாசம் உண்டு) இந்த போரில் யார் கை ஓங்குகிறதோ அவர்களே வெற்றியை பெற முடியும் என இந்திய தலைவர்கள் பலமுறை பேட்டிகளில் சொல்லியுள்ளனர். சில ஆண்டுகளாகவே இந்த மாற்றம் நடந்து வந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ராணுவ தளவாட சோதனை நடக்காத மாதமே இல்லை என்ற அளவுக்கு, ஒவ்வொரு முறையும் புதுப்புது ஆயுதங்கள் பரிசோதிக்கப்பட்டு படைகளில் சேர்க்கப்பட்டு வருகின்றன. தரைப்படை, விமானப்படை, கப்பல் படைகளுக்கு தேவையான அத்தனை தளவாடங்களும், ஆயுதங்களும் உள்நாட்டிலும் தயாரிக்கப்படுகின்றன. வெளிநாடுகளில் இருந்தும் தருவிக்கப்படுகின்றன.
வெளிநாட்டு தொழில்நுட்பங்களை விட, உள்நாட்டு தொழில்நுட்பங்களே மிகவும் சிறந்தவை, பாதுகாப்பாவை என பாரத பிரதமர் மோடியே பலமுறை கூறியுள்ளார். நேற்று கூட அவர், ஆயுத கொள்முதல் எந்த அளவு குறைகிறதோ, அந்த அளவு ஊழல் குறையும். தவிர உள்நாட்டு பாதுகாப்பு தயாரிப்புகளை ஊக்கப்படுத்த... ஊக்கப்படுத்த பாதுகாப்பும் பலப்படும். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஊழலை ஒழிப்பதில் மட்டுமல்ல... பாதுகாப்பினை பலப்படுத்துவதிலும் பயன்படுத்த முடியும் என, உறுதிபட கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று இந்தியா புதியதாக, ஒரு வான் பாதுகாப்பு சாதனத்தை பரிசோதித்து உள்ளது.
இந்தியா தன் சொந்த உருவாக்கமான வான் பாதுகாப்பு சிஸ்டம் AD-1 பரிசோதனையினை நேற்று வெற்றிகரமாக செய்தது. அந்த சோதனை மிக துல்லியமாக வெற்றி பெற்றிருக்கிறது. இதனால் உலகில் அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் நாடுகளை அடுத்து சொந்த வான்பாதுகாப்பு சாதனங்களை கொண்ட நாடு என்னும் பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இந்த AD-1 (Air Defence 1) என்பது சாதாரணம் அல்ல, உலகின் எந்த மூலையில் இருந்தும் இந்தியா நோக்கி வரும் ஏவுகணைகளை தன் எல்லையில் இருந்து, 200 கிமீ தொலைவுக்கு அப்பாலே வீழ்த்தி விடும், அணுகுண்டை தாங்கி வரும் ஏவுகணைகளை கூட இது முறியடிக்கும்.
நேற்று அப்துல்கலாம் தீவில் நடந்த இந்த சோதனை பெருமளவில், வெற்றி பெற்றுள்ளது. விரைவில் நமது சொந்த தயாரிப்பான இந்த சாதனங்கள் நாடு முழுக்க நிறுவப்பட்டு விடும். உலகின் வலிமையான வான்பாதுகாப்பு சாதனம் என நம்பப்பட்ட ரஷ்யாவின் எஸ் 400 சாதனம் பெரிதாக சோபிக்காத நிலையில், அதனை வாங்கிய இந்தியாவுக்கும் இந்த சாதனத்தின் செயல்பாடு குறித்த சில தயக்கம் இருந்தது, இனி அது அவசியமில்லாமல் போய் விட்டது.
இதனால் மேற்கொண்டு ரஷ்யாவிடம் இருந்து, அவற்றை வாங்க வேண்டிய அவசியமில்லை. நம் சொந்த தயாரிப்பே இதனை மாற்றீடு செய்யும். இந்தியா பெற்றிருக்கும் வெற்றி உலக நாடுகளால் பெரிதாக கவனிக்கபடுகிறது, சில ஆச்சரிய பார்வைகளும் அதனுடன் கோபம் மற்றும் வெறுப்பு பார்வைகளும் பதிகின்றன.
இனி இந்திய வான்வெளி இந்தியருக்கானது, அந்நியர் யாரும் நம்மை மீறி வந்துவிட முடியாது. இதேபோல் தேசிய பாதுகாப்பு தொடர்பான அத்தனை விஷயங்களிலும் எதிர்கால போர்முறைக்கு ஏற்ப நமது முப்படைகளும் வேகமாக மாறி வருகின்றன என பாதுகாப்பு நிபுணர்கள் கூறி வருகின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu