டூ வீலர் மீது கார் மோதி விபத்து கணவன்- மனைவி பலி

டூ வீலர் மீது கார் மோதி விபத்து கணவன்- மனைவி பலி
X
கம்பம் அருகே கூடலுாரில் டூ வீலர் மீது கார் மோதிய விபத்தில் கணவன், மனைவி பலியாகினர்.

தேனி மாவட்டம், கூடலுார் கன்னிகாளிபுரத்தை சேர்ந்தவர் தசரதன், 70. இவரது மனைவி அமுதா, 55. இவர்கள் காஞ்சிமரத்துறை, கழுதை மேடு பகுதியில் விவசாயம் பணியில் ஈடுபட்டு வந்தனர். பணி முடிந்து கணவனும், மனைவியும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். டூ வீலர் பகவதி அம்மன் கோயில் அருகே வந்த போது கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வேகமாக வந்த கார் மோதியது. இதில் கணவன், மனைவி துாக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து இறந்தனர். லோயர்கேம்ப் போலீசார் கார் டிரைவர் முகமதுசியாசை, 33 கைது செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!