கூடலூரில் இரத்ததான முகாம்

கூடலூரில் ரோட்டரி கிளப் ஆப் கூடலூர் கார்டன் சிட்டி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக இரத்ததான முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கூடலூரில் இரத்ததான முகாம்
X

தானத்தில் சிறந்த தானம் இரத்த தானம் என்ற சொல்லுக்கேற்ப இரத்ததான முகாம் பல்வேறு தொண்டு நிறுவனங்களாலும் அரசு மருத்துவமனைகளிலும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த இரத்ததான முகாம்களில் ஒவ்வொரு மனிதனும் கலந்து கொண்டு நம் உடலில் இருந்து வழங்கப்படும் இரத்தமானது விபத்து காலங்களிலும் உடல்நலக் குறைபாட்டினால் தவித்து வருபவர்களுக்கும் பல்வேறு மருத்துவ பயன்பாட்டிற்கும் ஒருவரது உயிரைக் காப்பாற்றும் விதமாக இந்த இரத்தம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்காக இரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டு இங்கு சேகரிக்கப்படும் இரத்தமானது சேமிக்கப்பட்டு அவசர காலங்களில் மனிதனின் உடலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று தேனி மாவட்டம் கூடலூரில் ரோட்டரி கிளப் கூடலூர் கார்டன் சிட்டி மற்றும் கூடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பாக ரத்ததான முகாம் கூடலூர் என்.எஸ்.கே.பி காமாட்சியம்மாள் துவக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த இரத்ததான முகாமினை உத்தமபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சின்னகண்ணு கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

மேலும் இந்த இரத்ததான முகாமில் கூடலூர் ஆய்வாளர் முத்துமணி, இரத்த வங்கி கம்பம் கிளையின் அலுவலர் முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்று நடைபெற்ற இரத்ததான முகாமில் கூடலூர் பகுதியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது ரத்தத்தை தானமாக வழங்கி சென்றனர். இரத்த தானம் வழங்கிய அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Updated On: 14 Feb 2021 5:59 PM GMT

Related News

Latest News

 1. கல்வி
  Canada Student Visa Latest News-கனடாவில் படிக்க இந்திய மாணவர்கள்...
 2. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 31,169 நபர்களுக்கு தேசிய அடையாள...
 3. தொழில்நுட்பம்
  83 Spanish Newspapers are Suing Meta-மெட்டா மீது ஸ்பானிஷ் ஊடகங்கள்...
 4. நாமக்கல்
  காப்பீடு ஒப்படைப்பு செய்தவருக்கு ரூ 1.20 லட்சம் வழங்க நுகர்வோர்...
 5. தமிழ்நாடு
  ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை
 6. தொழில்நுட்பம்
  Chandrayaan 3 Latest News-சந்திரயான்-3 பூமியின் சுற்றுப்பாதைக்கு...
 7. ஈரோடு
  பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியாக சரிவு
 8. தஞ்சாவூர்
  தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடக்கம்: ஆட்சியர்...
 9. டாக்டர் சார்
  Pani Vedippu குளிர்காலங்களில் ஏற்படும் பாத வெடிப்புகளைப் போக்க...
 10. ஈரோடு
  Vel Pray Song Release சென்னிமலையில் இருந்து பழனிக்கு ஜன., 1ம் தேதி...